பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க் கேசிகன் ☆ 19


9. அசும்பு - மலையிலுள்ள சேற்றுக் குழி, பூசல் - மரத்து ஒசை. 12. விடரகம் - மலைக்குகை. 13. மான் அதர் - மான்கள் செல்லும் தடம் பதிந்த வழி. 14. மின்னுவிட - மின்னல் வழிகாட்ட

உள்ளுறை பொருள்கள்: 1. கரடிக்குப் பாம்பை வருத்த வேண்டும் என்னும் கருத்துச் சிறிதும் இல்லை. எனினும், அது தன் காரியம் செய்யவே, அதன் நகங்கள் படுதலாற் பாம்பும் துயருற்றது. அதுபோல, அவரும் நம்மை வருத்தும் எண்ணம் உடையவரல்லர். எனினும், அவர் தமது காரியமாகிய களவின்ப நுகர்விலேயே ஒழுகுதலால், நாமும், இவ்வாறு எதிர்பாராத பல வருத்தங்களுக்கு உள்ளாகின்றோம்.

2. பலாப்பழத்தின் நாற்றமுடைய மலைச்சாரலிலே, பன்றியைக் கொன்று இழுத்துவருதல் மூலம், புலால் நாற்றம் எவ்விடத்தும் கமழச் செய்துவிட்டது புலி. அதுபோல, அவரும் தம் இன்ப நாட்டத்தால் நம்மைக் களவிலே கூடி, நம் சிறப்புடைய குடிக்கு ஊரின்கண் எழுந்த அலரினை உண்டாக்கிவிட்டனர்.

3. வாழைக் காட்டிலே வாழையினை உண்ணவந்த களிறு, அதனையும் இழந்து, குழியுள்ளும் சிக்கியது, அதன் துயர் தீர்க்கப் பிடியானை மரங்களை முறித்துப் போட்டது. அது மரங்களை முறிக்கும் ஒலி எங்கும் கேட்டது. அதுபோல், அவரும் நமது நலம் நுகர விரும்பி வந்தார். களவு ஒழுக்கமாகிய குழியிலே சிக்கினார். அதனின்றும் கரையேற வழியறியாது மயங்கினார். அதனை விட்டு வரையவும் மாட்டாது, நம் வீட்டுக் காவலின் அருமையினால் நம்மை அடையவும் மாட்டாது துயருற்றார். அதனைப் போக்க, அறத்தொடு நிற்றல் முதலியவற்றால் நாமே வரைந்து மணந்துகொள்ள முயன்றாலோ, ஊர் எல்லாம் அலர் பெரிதாக எழுகின்றதே? இஃது என்னையோ?

9. நசைஇச் சென்ற நெஞ்சு!

பாடியவர்: கல்லாடனார். திணை: பாலை. துறை: வினைமுற்றி மீண்ட தலைமகன் தேர்ப்பாகன் கேட்பச் சொல்லியது.

(தலைவியைப் பிரிந்து வினைமேற் சென்றனன் ஒரு தலைவன். அவள் நினைவை அவன் மனம் ஒருபோதும் மறக்கவே இல்லை. ஒருவாறாக வினையும் முடிந்தது. அவன் திரும்பிக் கொண்டிருக்கின்றான். அவன், 'தன் நெஞ்சம் தனக்கு முன்பே தன் காதலிபாற் சென்றுவிட்டது என்பதனைத், தன் பாகனுக்கு மிகவும் நயமாக உரைக்கின்றான்.)

          கொல்வினைப் பொலிந்த, கூர்ங்குறும் புழுகின்,
          வில்லோர் தூணி வீங்கப் பெய்த