பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24

அகநானூறு -களிற்றியானைநிரை


துயருற்றவரினும், அவருக்கு அன்புடையார் அதிகமாக வருந்துவர் என்னும் உலகியல் உண்மையும் இதனால் உணரப்படும்)

          வானம் ஊர்ந்த வயங்கொளி மண்டிலம்
          நெருப்பெனச் சிவந்த உருப்பவிர் அங்கட்டு,
          இலையில மலர்ந்த முகையில் இலவம்
          கலிகொள் ஆயம் மலிபுதொகுபு எடுத்த
          அஞ்சுடர் நெடுங்கொடி பொற்பத் தோன்றி, 5

          கயந்துகள் ஆகிய பயம்தபு கானம்
          எம்மொடு கழிந்தனர் ஆயின், கம்மென,
          வம்புவிரித் தன்ன பொங்குமணற் கான்யாற்றுப்,
          படுகினை தாழ்ந்த பயிலினர் எக்கர்,
          மெய்புகுவு அன்ன கைகவர் முயக்கம் 10

          அவரும் பெறுகுவர் மன்னே! நயவர,
          நீர்வார் நிகர்மலர் கடுப்ப, ஒமறந்து
          அறுகுளம் நிறைக்குந போல, அல்கலும்
          அழுதல் மேவல வாகிப்,
          பழிதீர் கண்ணும் படுகுவ மன்னே! 15

வானத்திலே ஊர்ந்து செல்லுகின்ற தன்மையது விளங்கும் ஒளியினையுடைய ஞாயிற்று மண்டிலம், அது தீயெனச் சிவந்தது. அதனுடைய வெம்மையால் எரிக்கப்பட்டு விளங்குவது அழகிய காடு. அதனிடத்தே, இலையற்றுப் போயினவைகளாக மலர்ந்துள்ளன அரும்பு இல்லாத இலவம் பூக்கள். இலவம் அங்ங்ணம் மலர்ந்திருக்கின்ற தன்மை, ஆரவாரத்தைக் கொண்ட மகளிர் கூட்டம், மகிழ்வுடன் கூடி எடுத்த அழகிய கார்த்திகை விளக்கீடு விழாவின் நெடிய விளக்கு ஒழுங்குபோலத் தோன்றும். அத்தகைய காட்டிலே, குளங்கள் நீரற்றுப்போய்ப் புழுதி பட்டுத் தோன்றும். அவ்வாறு வளம் தப்பிய காடு அது. அதனிடத்து, நம்மையும் உடன் கொண்டவராக, நம் தலைவர் சென்றனர் என்றால்

மார்புக் கச்சினை விரித்து வைத்தாற்போல, மணல்மேடுகள் எழும்பியுள்ள காட்டாற்றினது, மிக்க பூங்கொத்துக்களையுடைய மரக்கிளைகள் தாழ்வாக விளங்குகின்றதொரு மணல் மேட்டிலே, உடல்கள் ஒன்றுடன் ஒன்று உட்புகுந்து விட்டாற்போன்று விரும்பும் முயக்கத்தினை, அன்பு தோன்ற, அவரும் எம்முடன் கூடி அடைவர்.

குற்றமற்ற எமது கண்களும், நீர்சோரும் ஒளி பொருந்திய நீர்க்குவளை மலரினைப்போல, ஒழிவே இல்லாமல், நீரற்று வரண்ட குளத்தினையும் பெருக்கி விடுவனபோல நாளும் நீர்