பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க் கேசிகன் ☆ 31


துன்பத்தை என் உடலுள்ளும் நிறுத்தியவனாக, யானும், அவளுடைய நிலைமையாகிய துயருக்கே செல்லலானேன்.

தூண்டப்பெறும் வேகங்கொண்ட குதிரையின், எதிர்ப்படும் தடைகளாகிய அவற்றை விலக்கி, முன்செல்லும் செலவு மிகுதியாகக் கற்களிலே மோதி ஒலிக்கும் பல ஆரங்களையுடைய தேருருளையின் ஒலியானது, கார்காலத்து மேகங்களின் இடி முழக்கினைப்போல ஒலிசெய்ய, முனையாகிய நல்லூரையுடையவன் வரும், அணிசெய்யப் பெற்ற நெடுந்தேரினை அவ்வேளையிற் கண்டேன். அவளும் தன் துயர் தீர்ந்தனள்.

சொற்பொருள்: 2. தாஅய் - தாவி, 9. மேயலருந்து - மேயலாக ஆர்ந்த, மேயல் உணவு, மதவு - வலி.10. செருத்தல் - பசுவின் மடி பிலிற்ற - புறப்படவிட 16. பையுண் - நோய்.

விளக்கம்: இரலை தன் பிணையைத் தழுவிச் செல்லும் காட்டுவழி வருபவராயிருந்தும் எம்மை மறந்தாரோ? இதன்கண் உட்பொதிந்துள்ள ஏக்கத்தை உணர்க. பாணன் கடவுளை வாழ்த்தியது, அவளுக்காக இரங்கி அருளுதலை வேண்டி என்க.

‘கடவுள் வாழ்த்தி’ என்பது காண்க. கடவுள் என்னும் இறைக்குரிய சொல்லின் ஆட்சி பழைமையானது என்பதனையும் இதனால் அறிக. கடந்து நின்றும், உள் நிறைந்து நின்றும் உயிர்க்கு உதவுஞ் சக்தியையே கடவுள்' என்றனர்.

15. காப்பு இகந்து போகி!

பாடியவர்: மாமூலனார். திணை: பாலை. துறை: மகட் போக்கிய தாய் சொல்லியது. சிறப்பு: கோசர்களின் துளுநாடு; பாழிமலைத் தலைவனான நன்னன்.

(தன்னுடைய மகள் களவிலே கூடிவருவதை, அவளுடைய உடலினும் செயலினும் காணப்பெற்ற புதுப்புது மாற்றங் களினால் உணர்ந்தாள் தாய். அவள் மனம் பெரிதும் வருந்தியது. தன் மகளை, வீட்டைவிட்டு அயலே செல்லுதலும் கூடாதெனத் தகைந்து இற்செறித்தாள். மகளோ, தன் காதலனுடன் கலந்த அன்பினள். அதனால், எப்படியோ கட்டுக் காவல்களை எல்லாம் கடந்து, அவனுடன் வெளியேறிப் போய்விட்டாள். அப்போது, தாய் சொல்லியது இது.)

          எம்வெங் காமம் இயைவது ஆயின்,
          மெய்ம்மலி பெரும்பூண், செம்மற் கோசர்
          கொம்மையம் பசுங்காய்க் குடுமி விளைந்த
          பாகல் ஆர்கைப் பறைக்கட் பீலித்
          தோகைக் காவின் துளுநாட்டு அன்ன, 5