பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

32

அகநானூறு -களிற்றியானை நிரை


          வறுங்கை வம்பலர்த் தாங்கும் பண்பின்
          செறிந்த சேரிச் செம்மல் மூதூர்,
          அறிந்த மாக்கட்டு ஆகுக தில்ல -
          தோழி மாரும் யானும் புலம்பச்,
          சூழி யானைச் சுடர்ப்பூண் நன்னன் 10

          பாழி அன்ன கடியுடை வியன்நகர்ச்
          செறிந்த காப்பு இகந்து, அவனொடு போகி,
          அத்த இருப்பை ஆர்கழல் புதுப்பூத்
          துய்த்த வாய, துகள்நிலம் பரக்க,
          கொன்றை யம்சினைக் குழற்பழம் கொழுதி, 15

          வன்கை எண்கின் வயநிரை பரக்கும் -
          இன்துணைப் படர்ந்த கொள்கையொடு ஒராங்குக்,
          குன்ற வேயின் திரண்ட என்
          மென்தோள் அஞ்ஞை சென்ற - ஆறே!

அவளுடைய தோழிமார்களும் யானும் அவளைக் காணாது புலம்புகின்றோம். முகபடாம் அணிந்த போர் யானைகளையும், ஒளிசெய்யும் அணிகளையும் உடையவன் நன்னன். அவனுடைய பாழி என்னும் ஊர் மிகுந்த கட்டுக் காவல்களை உடையது. அதைப்போன்று காவல் செறிந்து விளங்கிய, தந்தையினது பெரிய இல்லத்தின் காவலையும் கடந்து சென்று விட்டனள். அவள் காதலனான அவனோடும் உடன்போக்கிலே தானும் போய்விட்டனள்.

அருஞ்சுரத்து இருப்பையிலே ஆர்க்குக் கழன்ற புதிய பூக்கள் விளங்கும். அவ்விடத்தேயுள்ள கரடிகள், அப் புதுப் பூக்களைத் தின்னும், அங்ங்ணம் தின்றவாயினவாய், அவை நிலம் புழுதி பரக்கும்படியாகச் செல்லும். சென்று கொன்றை மரத்தின் அழகிய கிளைகளிலேயுள்ள குழல் போன்ற கொன்றைப் பழங்களைக் கோதும். வலியமைந்த கைகளையுடைய அக் கரடிகளின் வலிய கூட்டம் அங்ஙனம் பரந்து செல்லுகின்ற வழியிலே அவள் சென்று விட்டனள்! குன்றத்து மூங்கிலைப் போன்ற, திரண்ட மென்மையான தோள்களையுடைய எம் அன்னை, அங்ஙனம் போய் விட்டனள்!

மெய்ம்மையான மொழிகளால் சிறப்புற்றோர், பேரணிகளை உடைய செம்மல்கள், கோசர். அவருடைய ந்ாடு துளு நாடு. தலையிலே ஆர்க்கினையுடைய, திரண்ட பசுமையான காய்கள் முற்றிப் பழுத்த பாகற் பழங்களைத் தின்னும், பறைபோல வட்டமான கண்களையுடைய தோகைகளைக் கொண்ட மயிலினங்கள் நிறைந்திருக்கும் சோலைகளை உடையது அத் துளு நாடு. அவர்கள் செல்லும்