பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க் கேசிகன் ☆ 39


இரவு நீ துன்பம் உற்றனை என்றாலும், அடுத்து வரும் மறுநாட் காலையிலேயே, என் தோழி உயிரோடு வாழ்பவள் அல்லளே! எவ்விதமான இடையூறும் இல்லாத வழிகளானாலும், அங்குப் பலகாலும் போய்வருவாரும், நீடுதல் இலையாகத் தவறுதலும் செய்வரன்றோ? அதனால், நின் இரவுவருகை குறித்து யாங்கள் மனஞ்சுழலும் வருத்தத்தினையே அடைகின்றோம்.

அகன்ற மலையிலுள்ள வளைந்த மூங்கிலின் கணுக்களுக்கு இடைப்பட்ட இடத்தைப்போல, எம் தாய் போற்றி வளர்த்தவை அகன்ற மென்மையான எம் தலைவியின் தோள்கள். எம் தோட்டத்தினை அடுத்துள்ள, வளைந்த தேனிறால் வைக்கப் பெற்ற முகடுகள் உயர்ந்திருக்கும் நெடிய மலைக்கண், பழங்கள் தொங்குகின்ற மரச் செறிவினுள், காந்தள் செறிந்த அழகிய புதரினிடத்தே, பகற் போதிலே நீ வந்தாயானாலும், அவள் தோள்களைத் தழுவிப் பொருந்துவை (அதனால், இனிப் பகலிலேயே வருக என்றனள் என்க.)

சொற்பொருள்: 3. கல் உயர் மறி சுழி - உயர் கல் மறி சுழி. 4. மராஅ யானை - மதத்தாலே பிடியொடுங் கன்றொடும் மருவாத யானை, 9. விழுமம் - இடர். வழி நாள் - பின்னாள்; விழுமம் அறிவது பின்னாள்; அந்நிலையே அவள் வாழாள் என்க. 12. நீடின்று - நீடுதல் இலையாக -

விளக்கம்: இனி, ‘தேனிழைத்த நெடுவரை, எனவும் பழம் தூங்கும் நளிப்பின் எனவும், காந்தளம் பொதும்பு எனவும் பகற் குறியிடத்தைக் குறிப்பிடுவதனால், தேன் எடுக்க வருவாரும், பழம் சேகரிக்க வருவாரும், பூப்பறிக்க வருவாருமாகப் பகல்வேளை அவ்விடத்து மக்கள் நிறைந்திருப்பர் என்பது கொண்டு, பகற்குறியும் குறிப்பால் மறுத்து, வரைவுகடாயினாள், என்று கொள்ளுக.

19. எம்மே மறவல் ஒம்புமதி.

பாடியவர்: பொருந்தில் இளங்கீரனார். திணை: பாலை. துறை: நெஞ்சினால் பொருள் வலிக்கப்பட்டுப்பிரிந்த தலைமகன், தலைமகளுடைய நலன் விரும்பி எண்ணிய, தன் நெஞ்சிற்குக் கூறியது.

(நெஞ்சில் பொருளாசை மிகுந்தது, அவன் தலைவியைப் பிரிந்து சென்றான். இடைவழியில், அவன் நெஞ்சிலே அவளுடைய நினைவு மிகுந்தது அவளை அடையும் ஆசையும் அதிகமாயிற்று. தன்னைத்துாண்டிப் பிரியச் செய்ததன் நெஞ்சமே தனக்குத்துணையற்று, அவளை நாடிப்பின் செல்வதனைக் கண்டு, அவன் தன் நெஞ்சிற்குச் சொல்லியதாக அமைந்தது இது.)