பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

40

அகநானூறு - களிற்றியானை நிரை


          அன்றுஅவண் ஒழிந்தன்றும் இலையே; வந்துநனி
          வருந்தினை - வாழி,என் நெஞ்சே! - பருந்துஇருந்து
          உயாவிளி பயிற்றும், யாஉயர் நனந்தலை,
          உருள்துடி மகுளியின் பொருள்தெரிந்து இசைக்கும்
          கடுங்குரற் குடிஞைய நெடும்பெருங் குன்றம், 5

          எம்மொடு இறத்தலும் செல்லாய்; பின்நின்று,
          ஒழியச் சூழ்ந்தனை ஆயின், தவிராது,
          செல்இனி, சிறக்கநின் உள்ளம் வல்லே
          மறவல் ஓம்புமதி, எம்மே - நறவின் -
          சேயிதழ் அனைய ஆகிக், குவளை 10

          மாஇதழ் புரையும் மலிர்கொள் ஈர்இமை,
          உள்ளகம் கனல உள்ளுதொறு உலறி,
          பழங்கண் கொண்ட, கதழ்ந்துவீழ், அவிர்அறல்
          வெய்ய உகுதர, வெரீஇப், பையென,
          சில்வளை சொரிந்த மெல்இறை முன்கை 15

          பூவிழ் கொடியின் புல்லெனப் போகி;
          அடர்செய் ஆய்அகல் சுடர் துணைஆக,
          இயங்காது வதிந்த நம் காதலி
          உயங்குசாய் சிறுபுறம் முயங்கிய பின்னே!

எம் நெஞ்சமே! நீ வாழ்க! நாம் அவளைப் பிரிந்து வந்த அன்றே, அவ்விடத்தேயே ஒழிந்து கிடந்தாயும் அல்லை. இவ்வளவு தொலைவு வந்து, இப்போது மிகவும் வருத்த முற்றனை!

பருந்துகள் இருந்து, வழிச்செல்வோர் அஞ்சி வருந்தும் கூக்குரலைப் பலகாலும் எழுப்பும். யாமரங்கள், தம் உயர்ந்த அகன்ற கிளைகளிலே, உருள்கின்ற இழுகுபறையின் ஒசையைப் போலப், பொருள் தெரியுமாறு ஒலிக்கும் கடுமையான குரலினையுடைய ஆந்தைகளை உடையனவாக இருக்கின்றன. இத்தகைய நெடும் பெரும் குன்றத்தினை எம்மோடுசேர்ந்து நீயும் கடந்து செல்லாய் ஆயினை பின்னே சென்று ஒழிந்துபோகவே கருதினாய்! ஆனால், தடையின்றி இப்போதே விரைந்து போய்விடுவாயாக! நின் உள்ளத்து எண்ணம் சிறப்பதாக!

முன்னர்க் குவளையினது கரிய இதழினை ஒப்பன அவள் கண்கள்; அவை நீர் மிகுதியுடையவாக மாறி, இமைகளும் நனைந்திருக்கும். அதனால், பின்னர் நறவம் பூவின் சிவந்த இதழ் போலாகும். உள்ளத்தினுள்ளே கொதிப்பும் அதிகமாக, நினைக்கும் போதெல்லாம் வற்றித் துன்பம் கொள்வதற்கு ஏதுவான விரைந்துவீழும் கண்ணிர், வெப்பமுடையதாய்ச் சொரியும். பிரிவினால், அவள் உள்ளம் வெருவியிருப்பாள். சில