பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க் கேசிகன் ☆ 55


          சிறுபுறம் கவையின னாக, உறுபெயல்
          தண்துளிக்கு ஏற்ற பலஉழு செஞ்செய்
          மண்போல் நெகிழ்ந்து, அவற் கலுழ்ந்தே
          நெஞ்சுஅறை போகிய அறிவி னேற்கே! 25

'பெரிய மதிற்கதவினைப் பாய்ந்து பிளந்த யானைகளின் தந்தங்களிலே பொருந்திய, இரும்பினால் செய்யப்பெற்ற பூணின் அழகினை உடையன, கருத்த கண்களை உடைய இவை என்று, என் மார்பகங்களைப் பாராட்டி, அவை அழுந்தப் பொருந்திக் கிடந்தனர். யான் விலக்கவும் முயங்குதலை விலக்கற்க என்றனர். யான் வருந்தி 'ஒழிவீராக’ என்னவும், தாம் அதற்கும் இசையாதவராகிப், பின்னும் இவைகளைப் பாராட்டிய காலங்களும் முன்பு உள்ளன.

இப்பொழுதோ, புதல்வன் உள்ளத்தைப் பிறிதொன்றின் மேற் செல்லாதவாறு தடுத்துக் கொண்டபாலொடு, எம் மார்பகங்கள் சரிந்தன, தேமலை அணிந்தவையுமாயின. இனிமை கொண்ட இம் மென்முலைகள் விம்முமாறு, அவருடைய நறுஞ்சந்தனம் அணியப்பெற்ற நன்னிறம் விளங்கும் மார்பிலே முயங்குவதனை யாமே விரும்பினேம். அங்ஙனமாகவும், தமது மார்பிலே இனிமையான பால்படுதலை அவர் அஞ்சிய வராயினர். -

அவ்விடத்து, முன்னர் அணைத்தலைச் சற்றும் நெகிழ விடாத அவரது கைகள், இப்பொழுது நெகிழ்ந்தமையை யானும் கண்டேன். செவிலித்தாயின் கையிலேயிருந்த என் புதல்வனை நோக்கினேன். நீவிர் நும்முடைய அழகிய பரத்தையர்களுக்கு ஒத்த விருப்பம் உடையவராவீர்.இதோ, இந்தச் செல்வனுக்கு அன்பு பொருந்தியவர் யாம்' என்று அவரிடம் கூறிவிட்டு, மெல்ல என் மகனிடத்துச் சென்றேன்.

அதனைக் கண்ட அவரும், ‘யாமும் அவனிடத்துக் காதல் உடையேம் என்று கூறியவராகப் பணிந்து, என் முதுகினை வந்து அணைத்துக் கொண்டனர். மிக்க பெயலாகிய குளிர்ந்த மழையினை ஏற்றுக் கொண்ட, பன்முறை உழுதிட்ட செம்மையான வயலின் மண்ணைப்போல, என் நெஞ்சமும் அவ்வளவில், அவர்பால், என்னை வஞ்சித்துத் தான் சென்று விட்ட அறிவினை உடையவள் ஆயினேன். அத்தகைய எனக்கு.

வளைந்த முள்ளிச் செடியின் குவிந்த குலைகளினின்றும் வீழ்ந்த, மீன்முள்ளைப் போன்ற வெண்மையான காம்புகளை உடைய கரிய மலர்களை, விளையாடும் மகளிர்கள், தாம் செய்யும் விழாவுக்கு அழகு செய்வதற்காகக் கூட்டுவர்; அத்தகைய, அழகிய வயல்கள் பொருந்திய வளமிக்க ஊரனாகிய