பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் ★ 59


முன்னரும் அவற்றுட் பல தட்டைகளாகத் தோன்றின. நீதான், “வேறுபட்ட பல மணங்களும் கமழும், தேனொழுகும் கண்ணியினைச் சூடியவனாக வரும், விரைந்தோடும் வேட்டை நாய்களுடன் பல பல மலைகளையும் கடந்து செல்லும் வேட்டுவனை எய்தப்பெறுதல்” என்ற அளவோடு, அமைந்து விட்டனை.

நின், பூக்கள் பொருந்திய மாலையானது அசையுமாறு அடிக்கடி எழுந்து சென்று, கிளிகளை ஒட்டும் தெளிந்த ஒசைகளை இடையிடையே எழுப்பி, அங்கங்கே சென்று வருதல் வேண்டும். அங்ஙனம் நடக்காதிருந்தனையாயின், நம் அன்னை, 'சிறு கிளி ஒட்டுதலை இவள் அறியாள் என எண்ணித் தினை காத்தலுக்குப் பிறரைக் கொணர்ந்து நிறுத்துவள். அப்படியானால், நீ விரும்பும் அவனுடைய பரந்த மார்பினைத் தழுவுவதற்கு நினக்கு வாய்ப்பதும் அருமையாகும்!

சொற்பொருள்: 4. அருவி - அருவிநீரும் ஆம். கால் முதல். 21. தேற்றாள். - தெளிய அறியாள். காதலில் மூழ்கிக் கடமையை மறந்திருந்த தலைவிக்கு, இப்படி அறிவு கொளுத்துகிறாள் தோழி என்பதனை அறிக.

29. நெஞ்சம் நின் உழையதுவே!

பாடியவர்: வெள்ளாடியனார். திணை: பாலை. துறை: வினைமுற்றி மீண்ட தலைகமன், ‘எம்மையும் நினைத்து அறிதிரோ? என்ற தலைமகளுக்குக் கூறியது.

(பொருளாசையால் தன் காதலியைப் பிரிந்து, பிற நாட்டிற்குச் சென்றான் ஒருவன். அவள், அவன் நினைவினால் மெலிந்தாள். அவனும், தொழில் முடித்துப் பெரும், பொருளுடன்வீடு திரும்பினான். ஆர்வமுடன் தன் காதலி' தன்னைக் கூடி மகிழ்வாள் என அவன் எதிர்பார்த்தான். அவளோ, ‘எம்மை நீர் நினைந்த துண்டோ? எனக் கேட்டு, அவனுடன் ஊடி நின்றாள். அப்பொழுது, அவன் அவள் உள்ளத்தைத் தெளிவிக்கக் கூறியது.)

          'தொடங்குவினை தவிர, அசைவில் நோன்தாள்,
          கிடந்துஉயிர் மறுகுவது ஆயினும், இடம்படின்
          வீழ்களிறு மிசையாப் புலியினும் சிறந்த
          தாழ்வுஇல் உள்ளம் தலைத்தலைச் சிறப்பப்,
          செய்வினைக்கு அகன்ற காலை, எஃகுஉற்று 5

          இருவேறு ஆகிய தெரிதகு வனப்பின்
          மாவின் நறுவடி போலக் காண்தொறும்