பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

64

அகநானூறு -களிற்றியானை நிரை




          மேற்கவட்டு இருந்த பார்ப்பினங் கட்குக்
          கல்லுடைக் குறும்பின் வயவர் வில்இட,
          நிணவரிக் குறைந்த நிறத்த அதர்தொறும்,
          கணவிர மாலை அமூஉக் கழிந்தன்ன
          புண்உமிழ் குருதி பரிப்பக் கிடந்தோர் 10

          கண் உமிழ் கழுகின் கானம் நீந்திச்,
          'சென்றார் என்பு:இலர் - தோழி! - வென்றியொடு
          வில்இலைத்து உண்ணும் வல்ஆண் வாழ்க்கைத்
          தமிழ்கெழு மூவர் காக்கும்
          மொழிபெயர் தேஎத்த பன்மலை இறந்தே 15

"செந்தீயைப் போலச் சிவந்து வெம்மையுடன் விளங்கும் ஞாயிற்று மண்டிலம். விளைநிலங்களிலேயுள்ள பயிர்கள் தீய்ந்து ஒழிய, அது அவற்றை எரித்து அழித்தது. அதனால், இன்று நிலவுலகமும் வளங்கெட்டுக் குறைவுற்றது.மக்கள் நிலைபெயரும் காலமும் இதுவன்றோ" என்று சொல்லும்படியாக, நிலை பெறும் உயிரினங்கள் வெப்பத்தால் மடிந்துகொண்டிருந்தன. மழை பெய்யாமற்போன அந்தக் கோடை காலத்திலே

"இலைகளே இல்லாததாக, மிகவும் உயரமாக வளர்ந்திருந்த யாமரத்தின், மேற்கிளைகளிலே இருந்த தம் குஞ்சுகளுக்குக், கற்களையுடைய சிற்றுார்களிலேயுள்ள மறவர்கள் வில்லால் அம்பினை எய்தலினால் செவ்வலரிமாலை இடப்பட்டு இறந்து கிடந்தாற்போல நிண ஒழுங்கும் புண்கள் சொரியும் குருதியும் சூழக் காயம்பட்டுக் கிடந்தோரது கண்களைக் கவர்ந்து சென்று, கழுகினம் உமிழ்ந்து கொடுக்கும். அத்தகைய கொடிய கானகத்தையும் தாண்டி -

விற்போரால் பகை கொண்டு எதிர்ப்பட்டோரை அழித்து, அவ்வெற்றியினால் எய்தும் திறைப்பொருள்களைப் பெற்றுத் துய்க்கும் வலிய ஆண்மையினை உடைய, தமிழ் நாட்டினையாளும் மூவர்களாலும் முறையே காக்கப் பெறும், வேற்று மொழியினை உடைய தேசங்களிலுள்ள பலபல மலைகளையும் கடந்து, இவளுடைய தலைவர் சென்றனர்” என்று சொல்ல மாட்டார்களோ? ஆயின், யான் மெலிவதும் நலிவதும்பற்றி என்னையே பலரும் பழிக்கின்றனரே?

சொற்பொருள்: 1. சிவந்த - கோபித்த. 2. புலக்கடை - புலங்கடை என நின்றது; புலத்திடம் என்பது பொருள். மடங்க - தீய.ஞொள்கி-குறைவுபட்டு.4.மன்னுயிர் ஆண்டு வாழும் மக்கள். மடிதல் - மரித்தல். 7. குறும்பு - குறும்பரிடம், 8. கணவிவரம் - செவ்வரலி இடுஉக் கழிந்தன்ன-விழவிட்டு.10. பரிப்ப-சூழ, புண் உமிழ் குருதி வாய்க்கொண்டுபோய்ப் பார்ப்பிற்கு உமிழ்ந்து