பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க் கேசிகன் ☆ 67


'இன்றும் தோலாவாறில்லை’ என்பது, இன்றும் அவன் வருவான் என்பதாம். இதனால், தலைவனின் தகுதி மேம்பாடும் அறியப்படும்.

33. பிறர் நகு பொருளே!

பாடியவர்: மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார். திணை: பாலை. துறை: தலைமகன் இடைச் சுரத்துத் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. சிறப்பு: வெல் போர் வானவனின் கொல்லிமலை.

(தன் உள்ளத்து எழுத்த பொருள்வேட்கையினால், தன் காதல் மனைவியையும் பிரிந்து சென்றான் ஒருவன். இடை வழியிலே, அவன் நெஞ்சம், அவளை நினைந்து நினைந்து அழிந்தது. அப்போது, அவன் தன் நெஞ்சிற்குக் கூறியது இது)

          வினைநன் றாதல் வெறுப்பக் காட்டி,
          மனைமாண் கற்பின் வாணுதல் ஒழியக்,
          கவைமுறி இழந்த செந்நிலை யாஅத்து
          ஒன்றுஓங்கு உயர்சினை இருந்த வன்பறை,
          வீளைப் பருந்தின் கோள்வல் சேவல் 5

          வளைவாய்ப் பேடை வருதிறம் பயிரும்
          இளிதேர் தீங்குரல் இசைக்கும் அத்தம்
          செலவு அருங்குரைய என்னாது, சென்று,அவண்
          மலர்பாடு ஆன்ற, மைஎழில், மழைக்கண்
          தெளியா நோக்கம் உள்ளினை, உளிவாய் 10

          வெம்பரல் அதர குன்றுபல நீந்தி,
          யாமே எமியம் ஆக, நீயே
          ஒழியச் சூழ்ந்தனை ஆயின் - முனாஅது
          வெல்போர் வானவன் கொல்லி மீமிகை,
          நுணங்குஅமை புரையும் வணங்குஇறைப் பனைத்தோள், 15

          வரிஅணி அல்குல், வால்எயிற் றோள்வயிற்
          பிரியாய் ஆயின் நன்றுமற் றில்ல.
          அன்றுநம் அறியாய் ஆயினும், இன்றுநம்
          செய்வினை ஆற்றுற விலங்கின்
          எய்துவை அல்லையோ, பிறர்நகு பொருளே! 2O

நெஞ்சமே! பொருள் ஈட்டிக் கொணருகின்ற காரியமானது எத்துணை நன்மை தருவது என்பதனை என் உள்ளமும் அதன்பால் ஈடுபடுமாறு மிகவும் எடுத்தெடுத்துக் கூறினாய். மாண்புற்ற கற்பினை உடையவளும், ஒளிரும் நெற்றியினை