பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க் கேசிகன் ☆ 71



35. மார்பு துணையாகத் துயிற்றுக!

பாடியவர்: அம்மூவனார். திணை: பாலை. துறை: மகட் போக்கிய நற்றாய் தெய்வத்திற்குப் பராஅயது. சிறப்புற்றோன்: மலையமானாட்டுத் திருக்கோவலூர் மன்னனா யிருந்த திருமுடிக்காரி.

(தன் வீட்டின் காவலைக் கடந்து, தன் காதலனுடன் சென்றுவிட்டாள் ஒரு பெண். அவள் தாய், மிகவும் மனம் வருந்தினாள். எனினும், தன் மகள் போன இடத்திலே, அவள் காதலனால் மிகவும் அன்பாகப் பேணப்பட வேண்டும் எனவும் அவளை ஆசீர்வதிக்கின்றாள்.)

          ஈன்று புறந்தந்த எம்மும் உள்ளாள்,
          வான்தோய் இஞ்சி நன்னகர் புலம்பத் -
          தனிமணி இரட்டும் தாளுடைக் கடிகை,
          நுழைநுதி நெடுவேல், குறும்படை மழவர்
          முனைஆத் தந்து முரம்பின் வீழ்த்த 5

          வில்ஏர் வாழ்க்கை விழுத்தொடை மறவர்
          வல்ஆண் பதுக்கைக் கடவுட் பேண்மார்;
          நடுகல் பீலி சூட்டித் துடிப்படுத்துத்,
          தோப்பிக் கள்ளொடு துரூஉப்பலி கொடுக்கும்
          போக்குஅருங் கவலைய புலவுநாறு அருஞ்சுரம் 10

          துணிந்து பிறள்ஆயினள் ஆயினும், அணிந்துஅணிந்து,
          ஆர்வநெஞ்சமொடு ஆய்நலன் அளைஇத், தன்
          மார்பு துணையாகத் துயிற்றுக தில்ல-
          துஞ்சா முழவிற் கோவற் கோமான்
          நெடுந்தேர்க் காரி கொடுங்கான் முன்துறை, 15

          பெண்ணையம் பேரியாற்று நுண்அறல்கடுக்கும்
          நெறிஇருங் கதுப்பின் என் பேதைக்கு,
          அறியாத் தேஎத்து ஆற்றிய துணையே!

வான் அளாவிய மதிற்கவரை உடைய நல்ல மாளிகை எமது அவளின்றி, அதுவும் தனிமையுற்றுக் கிடக்கிறது. அவளைப் பெற்றுப் பேணிவளர்த்த எம்மையும் அவள் நினைத்தாளில்லை.

ஒப்பற்றி மணியானது மாறிமாறி ஒலிப்பதும், கடையாணி இட்ட காம்பினை உடையதும், கூர்மையான முனையை உடையதுமாகிய, நெடிய வேலினை உடையவர் குறும்பினை உடையவரான மழவர்கள். வெட்சியாராகிய அவர், போர் முனையிலே வென்று பசுக்களை மீட்டனர். அவ் வெட்சியாரை, வில்லாண்மையே உழவாகக் கொண்ட வாழ்க்கையினையுடைய,