பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க் கேசிகன் ☆ 79



39. ஒழித்தது பழித்த நெஞ்சம்!

பாடியவர்: மதுரைச் செங்கண்ணனார். திணை: பாலை, துறை: பொருள் முற்றிய தலைமகன் தலைமகளைக் கண்டு கூறியது.

(தலைவியைப் பிரிந்து பொருளிட்டிவரச் சென்ற தலைவன் வந்துவிட்டான். பிரிவினால் வாடியிருந்த அவள், அவன் வந்ததும் அவனோடு கூடி மகிழ்தல் இயல்பு. அவளோ ஊடினாள். காரணம், பிரிவுக்காலத்து அவள் கண்ட கனவிலே வந்த அவன், அவளைத் தழுவவில்லையாம். அவனும், அதையே கூறி அவள் ஊடலைத் தணிவிக்கிறான். மிகவும் சுவையான உள்ளப் படப்பிடிப்பு இந்தப் பாடல்)

          'ஒழித்தது பழித்த நெஞ்சமொடு வழிப்படர்ந்து,
          உள்ளியும் அறிதிரோ, எம்?"என, யாழநின்
          முள்ளியிற்றுத் துவர்வாய் முறுவல் அழுங்க,
          நோய்முந் துறத்து நொதுமல் மொழியல; நின்
          ஆய்நலம் மறப்பெனோ மற்றே? சேண்இகந்து 5

          ஒலிகழை பிசைந்த ஞெலிசொரி ஒண்பொறி
          படுளுெமல் புதையப் பொத்தி, நெடுநிலை
          முளிபுன் மீமிசை வளிசுழற் றுறாஅக்
          காடுகவர் பெருந்தீ ஓடுவயின் ஓடலின்,
          அதர்கெடுத்து அலறிய சாத்தொடு ஒராங்கு 10
          
          மதர்புலி வெரீஇய மையல் வேழத்து
          இனம்தலை மயங்கிய நனந்தலைப் பெருங்காட்டு,
          ஞான்றுதோன்று அவிர்சுடர் மான்றால் பட்டெனக்,
          கள்படர் ஓதி! நிற்படர்ந்து உள்ளி,
          அருஞ்செலவு ஆற்றா ஆர்இடை, ஞெரேரெனப் 15

          பரந்துபடு பாயல் நவ்வி பட்டென,
          இலங்குவளை செறியா இகுத்த நோக்கமொடு,
          நிலம்கிளை நினைவினை நின்ற நிற்கண்டு,
          'இன்னகை இணையம் ஆகவும், எம்வயின்
          ஊடல் யாங்கு வந்தன்று?"என, யாழநின் 20

          கோடுஏந்து புருவமொடு குவவுநுதல் நீவி,
          நறுங்கதுப்பு உளரிய நன்னர் அமையத்து,
          வறுங்கை காட்டிய வாய்அல் கனவின்
          ஏற்று ஏக்கற்ற உலமரல்
          போற்றாய் ஆகலின், புலத்தியால் எம்மே! 25

வண்டினம் மொய்க்கின்ற, இயற்கையிலேயே நறுமணம் பெற்ற, கூந்தலை உடையவளே! "காதலுடையாரைப் பிரித-