பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க் கேசிகன் ☆ 83



          வைகுபுலர் விடியல், மைபுலம் பரப்பக்,
          கருநனை அவிழ்ந்த ஊழுறு முருக்கின்
          எரிமருள் பூஞ்சினை இனச்சிதர் ஆர்ப்ப,
          நெடுநெல் அடைச்சிய கழனிஏர் புகுத்து,
          குடுமிக் கட்டிய படப்பையொடு மிளிர, 5

          அரிகால் போழ்ந்த தெரிபகட்டு உழவர்
          ஓதைத் தெள்விளி புலந்தொறும் பரப்பக்,
          கோழினர் எதிரிய மரத்த கவினிக்,
          காடுஅணி கொண்ட காண்தகு பொழுதில்,
          நாம்பிரி புலம்பின் நலம்செலச் சாஅய் 10

          நம்பிரிபு அறியா நலமொடு சிறந்த
          நல்தோள் நெகிழ, வருந்தினள் கொல்லோ -
          மென்சிறை வண்டின் தண்கமழ் பூந்துணர்
          தாதுஇன் துவலை தளிர்வார்த் தன்ன
          அம்கலுழ் மாமை கிளைஇய, 15

          நுண்பல் தித்தி, மாஅயோளே!

நெஞ்சமே!

மென்மையான சிறகினை உடையவை வண்டினம். அவை மொய்த்துக் கொண்டிருக்கும் குளிர்ந்த மணம் உடைய பூங் கொத்துக்கள்; அந்தப் பூங்கொத்துக்களிலே உள்ள தாதுடன் கூடிய தேன்துளிகள் தளிரிலே ஒழுகினால் எப்படியோ, அப்படிப்பட்ட அழகு ஒழுகும் மாமை நிறத்திலே, இளைத்துத் தோன்றும், சிறுசிறு தேமற்புள்ளிகளை உடையவள், நம் தலைவி.

தங்கிய இருளானது புலர்கின்ற விடியற் காலத்திலே, எருமைகள் மேய்ச்சல் நிலத்திலே பரந்து செல்லும். முருக்க மரத்தின் கிளைகளில் அரும்புகள் தம் முறுக்கு நெகிழ்ந்து நெருப்பைப் போன்ற பூக்களையுடையனவாக விளங்கும். வண்டினம் அங்கே ஒலித்துக் கொண்டிருக்கும். நெடிய நெற் பயிரினை நட்டு முடிந்த வயல்களிலுள்ள ஏர்களை, உழவர் தலை குவிந்த கட்டிகளை உடைய தோட்டங்களிலே சேர்ப்பர். ஆராய்ந்த பகடுகளை உடைய உழவர்கள் சிலர், அரிதாளையுடைய நிலத்தைப் பிளந்து, மண் பிறழும்படியாக உழுவர். அவர்களது ஏர்மங்கல ஒசையாகிய தெளிந்த ஒலியானது, இடந் தோரும் பரக்கும் அழகுற்ற செழுமையான பூங்கொத்துக்களை உடைய மரங்கள் கொண்ட காடு இது. இக்காடு அழகுபெற்றுக் காட்சிக்கு இனிதாகத் தக்கவாறு விளங்குகின்ற இக்காலத்திலே,

நம் பிரிவு என்பதனையே அறியாத இயல்பான தன் அழகினோடு, மிகவும் சிறப்புடையனவாயிருந்த தன் நல்ல