பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் * 85



‘உரும் உரறு கருவிய பெருமழை தலைஇய’ என்ற அடியினை உருட்டுவண்ணத்திற்கு உதாரணங் காட்டுவர் பேராசிரியர்.

பாடபேதங்கள்: 3. மின்னு மிளிர்ந்தன்ன - மின்னல் ஒளி செய்தாற்போல.13.மாத்த கூரை.16. முருகின் அன்ன.17.எந்தையும் இல்லானாக 18. இவள் அது செயலே. -

159. அவலம் கொள்ளாதே!

பாடியவர்: ஆமூர்க் கவுதமன் சாதேவனார். திணை: பாலை துறை: பிரிவிடை வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறுத்தியது. சிறப்பு: குறும்பொறை நாடு; கொடுமுடி காக்கும் ஆமூர் முதலியனபற்றிய செய்திகள்.

(தலைவன் பிரிந்துபோயினதான தனித்துத் துயருறுகின்ற காலத்திலே. தன்உடலின் கவினெல்லாம் வேறுபட்டவளாகத் தோன்றினாள் தலைவி. அவளுக்குத் தலைவன் குறித்தவாறு வருபவன் என்ற உறுதியைக் கூறி வற்புறுத்தி, அதன் மூலம் அவளை ஆற்றுவிக்க முயல்கிறாள் தோழி)

        தெண்கழி விளைந்த வெண்கல் உப்பின்
        கொள்ளை சாற்றிய கொடுநுக ஒழுகை
        உரறுடைச் சுவல பகடுபல பரப்பி
        உமண் உயிர்த்து இறந்த ஒழிகல் அடுப்பின்
        வடியுறு பகழிக் கொடுவில் ஆடவர் 5

        அணங்குடை நோன்சிலை வணங்க வாங்கிப்
        பல்ஆன் நெடுநிரை தழீஇக் கல்லென
        அருமுனை அலைத்த பெரும்புகல் வலத்தர்,
        கனைகுரற் கடுந்துடிப் பாணி தூங்கி,
        உவலைக் கண்ணியர் ஊன்புழுக்கு அயரும் 10

        கவலை, காதலர் இறந்தனர் என, நனி
        அவலம் கொள்ளன்மா காதல் அம் தோழி!
        விசும்பின் நல்லேறு சிலைக்குஞ் சேட்சிமை
        நறும்பூஞ் சாரற் குறும்பொறைக் குணாஅது
        வில்கெழு தடக்கை வெல்போர் வானவன் 15

        மிஞ்றுமூக கவுள சிறுகண் யானைத்
        தொடியுடைத் தடமறுப்பு ஒடிய நூறிக்
        கொடுமுடி காக்குங் குரூஉக்கண் நெடுமதில்
        சேண்விளங்கு சிறப்பின்-ஆமூர் எய்தினும்,
        ஆண்டமைந்து உறையுநர் அல்லர், நின் 2O

        பூண்தாங்கு ஆகம் பொருந்துதன் மறந்தே.