பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் * 97


எதிரேற்க 6. தோன்றி - செங்காந்தள் 7. வெறி - மலர் நாற்றம். 9, இகுபனி - வடியும் கண்ணிர். உறைக்கும் - சிதறும் இனைபு - வருந்தி. 13. கந்து கட்டுத்தறி.

விளக்கம்: களிறுகளின் பூண்சிதைந்த கொம்புகள், பகைவர் கோட்டையானது வீழ்ந்து, போரும்வெற்றியுற்றதென்பதைக் குறிக்கும். எனினும், தன் சினம் தணியாத வேந்தன் என்பதனால், பகைவர் பணிந்து தரும் திறைப்பொருளை ஏற்றுத் திரும்புதலைச் செய்யாதவன் என்க. மழை பெய்யக்காடு கவின் பெற்றது போல, அவன் எய்தினால் அவளும் தொல்கவின் பெறுவாள் எனவும் உணர்க.

மேற்கோள்: ‘பிரிதற் பகுதியாகிய பாசறைப் புலம்பல் எனினும் நிலம்பற்றி முல்லையாயிற்று’ என, இதனை ‘ஏனோர் மருங்கினும் என்னும் இபாருளியற் சூத்திர உரையிலே இளம் பூரணர் காட்டினர்.

பாடபேதங்கள்: 7. வெறி வென்றன்றே. 8. கண்ணொடு இணையா.

165. அருமகளே என அழுமே!

பாடியவர்:... திணை: பாலை. துறை: மகட்போக்கிய தாயது நிலைமை, கண்டார் சொல்லியது.

(செல்வமாக வளர்ந்து வந்தவள் தலைவி. அவள், தன் தாயையும் ஆயத்தையும் பிரிந்து, தலைவைனுடன் உடன்போக்கிலே சென்றுவிட்டாள். அவள் சென்றதனால் ஆயம் அழகிழந்து தோன்றிற்று. தாயோ, தன் மகளின் பிரிவினால் பித்தாகி, அவள் விளையாடிய பாவையைப் புனைந்து, “மகளே! மகளே! என்று புலம்பினாள். இதனைக் கண்டோர் சொல்லும் வகையிலே அமைந்தது செய்யுள்)

        கயந்தலை மடப்பிடி பயம்பில் பட்டெனக்
        களிறுவிளிப் படுத்த கம்பலை வெரீஇ,
        ஒய்யென எந்த செவ்வாய்க் குழவி
        தாதுஎரு மறுகின் மூதூர் ஆங்கண்,
        எருமை நல் ஆன் பெறுமுலை மாந்தும் 5

        நாடுபல இறந்த நன்ன ராட்டிக்கு
        ஆயமும் அணிஇழந்து அழுங்கின்று தாயும்
        ‘இன்தோள் தாராய், இlஇயர்என் உயிர்! என,
        கண்ணும் நுதலும் நீவித், தண்ணெனத்,
        தடவுநிலை நொச்சி வரிநிழல் அசைஇத், 10