பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் * 91



மேற்கோள்: ‘தாய் நிலையும் ஆயத்து நிலையும் கண்டோர் கூறியவாறு, எனத் ‘தன்னும் அவனும் அவளும் சுட்டி என்னுஞ் சூத்திர உரையினும், நற்றாய் மணற்பாவையைப் பெண்பாலாகக் கூறித் தழிஇக் கொண்ட முதலிற் பல்கெழு கிளிவியாயிற்று’ எனப் பால்கெழு கிளவி நால்வர்க்கும் உரித்தே’ என்னும் சூத்திர உரையினும் நச்சினார்க்கினியர் காட்டினர்.

பாடபேதங்கள்: 8 ஈன்றோட்டாராய். 1. வாடு மலர் சூடித். 13. மருமகளே யென.

166. அவர் யாரோதான்?

பாடியவர்: இடையன் நெடுங்கீரனார். திணை: மருதம். துறை: பரத்தையோடு புனல் ஆடிய தலைமகன், தலை மகளிடைப் புக்கு, ‘யான் ஆடிற்றிலேன்’ என்று சூளுற்றான் என்பது கேட்ட பரத்தை, தன் பாங்கிக்குச் சொல்லியது. சிறப்பு: நெல்வளம் மிகுந்த வேளுர் பற்றிய செய்தி

(தன்னுடன் முதல்நாள் காவிரியிலே புதுப்புனலாடி மகிழ்ந்தும் இன்புற்றும் சென்ற தலைவன், தன் மனைவியிடம் ‘தான் அங்ஙனமேதும் செய்யவில்லை எனப் பொய்ம்மை கூறி, அவள் ஊடலைத் தணிவித்தான். அந்தப் பொய்யுரையைக் கேட்ட பரத்தை தன் தோழியிடம் இப்படிக் கூறுகிறாள்.)

        ‘நலமரங் குழிஇய நனைமுதிர் சாடி
        பல்நாள் அரிந்த கோஒய் உடைப்பின்,
        மயங்குமழைத் துவலையின் மறுகுடன் பனிக்கும்
        பழம்பல் நெல்லின் வேளுர் வாயில்,
        நறுவிரை தெளித்த நாறினர் மாலைப், 5

        பொறிவரி இனவண்டு ஊதல கழியும்
        உயர்பலி பெறுஉம் உருகெழு தெய்வம்,
        புனைஇருங் கதுப்பின் நீகடுத் தோள்வயின்
        அனையேன் ஆயின், அணங்குக, என்’ என
        மனையோட் தேற்றும் மகிழ்நன் ஆயின், 10

        யார்கொல்-வாழி, தோழி!-நெநல்
        தார்பூண் களிற்றின் தலைப்புணை தழீஇ,
        வதுவை ஈர்அணிப் பொலிந்து, நம்மொடு,
        புதுவது வந்த காவிரிக்
        கோடுதோய் மலிர்நிறை, ஆடி யோரே? 15

        தோழியே! நீ வாழ்வாயாக!