பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் * 109



என்று, அலவனே! நீதான் அவனிடம் சென்று சொல்லுதல் வேண்டும்.

என்று, தலைமகள் காமமிக்க கழிபடர்கிளவியாற். கூறினாள் என்க.

சொற்பொருள்: 2. தேன் இமிர் - வண்டு மொய்க்கும். 3. ஒருநின் ஒப்பற்ற நின்னை. 4. இருங்கழி - கரிய கழி. 6 களி - களிவெறி. 7. பறைஇய தளரும் - பறக்க மாட்டாது தளரும். 8.அலவன் நண்டு.9. கைதை - தாளை, படுசினை- தாழ்ந்த கிளை. 11. கோட்டு மீன் - சுறாமீன்.

உள்ளுறை: தாதுண்ட வண்டினம் களிவெறியால் மயங்கிப் பறக்கமாட்டாது தளர்வதுபோலத், தான் வேறிடத்துப் பெற்ற இன்பத்தினைவிட்டு நீங்கிவரமாட்டாது தலைவன் அங்கேயே மயங்கிக் கிடந்தனனோ என்றாள். காக்கை இரவின் எவ்வமொடு, பெடையுடனிருந்து இறாமீன் உண்பதாகக் கனவு காண்பது போலத், தலைவனுடனிருந்து தான் இன்ப நுகர்தலைக் கனவு கண்டு கொண்டவாறு இருக்கிறாள் என்றும் அவள்நிலை

மேற்கோள்: “துன்பத்துப் புலம்பல்” என்னும் மெய்ப்பாட்டிற்கு’, ‘இன்பத்தை வெறுத்தல்’ என்னுஞ் சூத்திரரை உயினும்: ‘துரது முனிவின்மை’ என்னும் மெய்ப்பாட்டிற்கு, ‘முட்டு வயிற் கழறல்’ என்னுஞ் சூத்திர உரையினும் இச் செய்யுளைப் பேராசிரியர் காட்டினர்.

பாடபேதங்கள்: 3. ஒரு நீ யல்லது.7. பறவை தளரும் பறைஇ தளரும். தளரும், கிளரும், 8. வேண்டுமாரலவ.

171. இனையல் வாழி தோழி!

பாடியவர்: கல்லாடனார். திணை: பாலை. துறை: தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறீஇயது.

(தலைமகன் தலைவியைப் பிரிந்து பொருள் தேடிவரச் சென்றனன். அவன் பிரிவினால் வாடிவாடி உழன்றாள் அவன் மனைவி. அவளுடைய ஆற்றாமையைக் கண்டு உள்ளம் நொந்த அவளுடைய தோழியானவள், இவ்வாறு கூறி, அவளை ஆற்றியிருக்கச் செய்ய முயலுகிறாள்.)

        ‘துதலும் நுண்பசப்பு இவரும்; தோளும்
        அகன்மலை இறும்பின் ஆய்ந்துகொண்டு அறுத்த
        பணைஎழில் அழிய வாடும்; நாளும்