பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் * 127



179. உமக்குத் தகுதியாகுமோ?

பாடியவர்: கொடிமங்கலத்து வாதுளி நற்சேந்தனார். திணை: பாலை. துறை: பிரிவு உணர்த்திய தலைமகனுக்குத் தோழி செலவு அழுங்கச் சொல்லியது. -

(பொருளார்வம் மிகுதியான உள்ளத்தினனாகத் தான் தன் தலைவியைப் பிரிந்து சென்று பொருள்தேடிவர விரும்புதலைத் தலைவன் ஒருவன், தன் தலைவியின் தோழியினிடத்தே கூறுகின்றான். அதனைக் கேட்ட அவள், அதனால் தலைவிக்கு நேரும் துன்ப மிகுதியைக் கூறி, அவனுடைய போக்கினைக் கைவிடுமாறு சொல்லுகின்றாள்.)

        விண்தோய் சிமைய விறல்வரைக் கவாஅன்,
        வெண்தேர் ஓடும் கடம்கால் மருங்கில்,
        துணைஎரி பரந்த துன்அரும் வியன்காட்டுச்,
        சிறுகண் யானை நெடுங்கை நீட்டி
        வான்வாய் திறந்தும் வண்புனல் பெறாஅது, 5

        கான்புலந்து கழியும் கண் அகன் பரப்பின்
        விடுவாய்ச் செங்கனைக் கொடுவில் ஆடவர்
        நல்நிலை பொறிந்தத கல்நிலை அதர,
        அரம்கொள் பூசல் களையுநர்க் காணாச்
        சுரம்செல விரும்பினிர் ஆயின்-இன் நகை, 10

        முருந்துஎனத் திரண்ட முள்ளயிற்றுத் துவர்வாய்,
        குவளை நாண்மலர் புரையும் உண்கண், இம்
        மதிஏர் வாள்துதல் புலம்ப,
        பதிபெயர்ந்து உரறதல் ஒல்லுமோ, துமக்கே?

வானிலே தோய்ந்துகொண்டிருப்பது போன்ற உயரமான மலையுச்சிகளையுடைய, பெருமைதங்கிய மலையின் பக்கமலைப் பகுதிகளிலே, பேய்த்தேரானது ஒடிக் கொண்டிருக்கும் பெருமைமிகுந்த கற்காட்டின் பக்கத்தே, வேகமாக நெருப்புப் பரவிய கிட்டுதற்கரிய பெரிய காட்டிலேயுள்ள, சிறுத்த கண்களையுடைய யானையானது, தன்னுடைய நீண்ட துதிக்கையினை நீட்டியும், பெரிய வாயினைத் திறந்தும், நீர் வேட்கையால் துன்புற்று, வளவிய நீரினைப் பெறுவதற்கு இல்லாமல், காட்டினையே வெறுத்துக் கழிந்து போய்க் கொண்டிருக்கும்.

அத்தகைய இடமகன்ற பாலை நிலத்தின்கண், விடுதல் வாய்த்த சிவந்த கணைகளைக் கைக்கொண்ட, கொடிய வில்லினை உடைய மறவர்களின், நல்ல வெற்றியின் நிலையினை