பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் * 133


வேகத்தையுடைய புதுவெள்ளம்.12, அயிர் - கருமணல்.13, எக்கர் - மணல்மேடு, 14 வைப்பின் யாணர் - புது வருவாயினையுடைய ஊர்கள். 15. நான் மறை முதுநூல் - நான் மறையாகிய பழைய வேதங்கள்; அன்றாலின் கீழ் அறம் உரைத்த சிவபிரானைப் பற்றிக் கூறியது. 18. மனைமகளிர் - வீட்டுச் சிறுமியர். 20. மகர நெற்றி - மகரதோரணம் உயர்ந்ததைக் குறித்தது; அது காமன் விழாத் தொடக்கம் என்பதைக் காட்டுதற்கு 23. பண்டம் - மணப் பொருள்கள். 26. மறுகு - தெருக்கள்.

உள்ளுறை: ஆய் எயினனாற் பட்டுவீழ்ந்த மிஞரிலியின் உடற்குப் பறவையினம் நிழலிட்டாற்போன்று, அவள் பிரிவால் நலிந்த வெப்பந்தீர நீயும் சென்று தூதுரைப்பாயாக என்று குறிப்பால் உணர்த்தினன்.

விளக்கம்: ஆய் எயினன் பறவை இனங்கட்கெல்லாம் பாதுகாவலனாக இருந்தனன் என்பதுபற்றி அவனைக் காத்து நின்றன பறவைகள் என்பது, அகம்142இலும் சொல்லப்பட்டது. அவை சென்று தங்கும் துறை என்றதன் மூலம் அத்துறையின் சிறப்புப் பெறப்படும்; அஃது ஆலமுற்றம்.

பாடபேதங்கள்: 7. வண்மை எயினன். 12, அயிர் கொடு ஈண்டி, 17, கவின் பெறத் தைஇப். 18. பொழின் மணமகளிர். 22. பகர்வர். 23. வண்டாடு ஐம்பால். -

182. கடும் பகல் வருக!

பாடியவர்: கபிலர். திணை: குறிஞ்சி. துறை: தோழி இராவருவானைப் பகல் வா என்றது. சிறப்பு: வேலன் வெறியாடும் வியன்களம்போன்று மலைச்சாரல் விளங்கும் என்பது.

(இரவுக் குறியிலே தன் காதலியைச் சந்தித்துக் கூடிமகிழ்ந்து வருகின்ற தலைவன், விரைவிலே வரைந்து வந்து மணந்து கொள்ளுதலிலே முயற்சியுடையவனாதல் வேண்டும் என்று விரும்புகிறாள் தோழி. அதனால், இரவுக்குறி மறுத்துப் பகற்குறி நேர்வாள்போலச் சொல்லுகிறான். அதுவும் கை கூடாமையால் அவன் வரைந்து கோடற்கு முயல்வான் என்பது தேற்றம்)

        பூங்கண் வேங்கைப் பொன்னினர் மிலைந்து,
        வாங்கமை நோன்சிலை எருத்தத்து இரீஇ
        தீம்பழப் பலவின் சுளைவிளை தேறல்
        வீளை அம்பின் இளையரொடு மாந்தி,
        ஒட்டியல் பிழையா வயநாய் பிற்பட, 5