பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் * 139


தெளிந்த அறல்நீர் திரிமருப்பு - முறுக்குண்ட கொம்பு 13. கோடு - களைக்கொட்டு. துளர் எறி - களையினை வெட்டி எறிதல் 15. உருவ ஞாயிறு சிவந்த ஞாயிறு 18. தார் மணி - மாலைபோலக் கட்டித் தொங்க விட்டிருக்கும் மணிகள்.

உள்ளுறை: முல்லையானது கள்ளியை மூடி ம்றைத் திருந்தது போலத், தலைவியும் தன்னை வருத்திய பிரிவினா லுண்டாகிய நோயினை எல்லாம் புறந்தோன்றாமற் கற்பினாலே ஆற்றியிருந்தனள் என்க. தெளிந்த நீரினை மூடிய பூவினைத் தன் பிணையொடு வதியும் என்றாற்போலத், தலைவனும் தன் தலைவியின் மெலிவினை எல்லாம் நீக்கி, அவளுடன் கூடி இன்புற்று வாழ்வான் எனவும் கூறினாள்.

பாடபேதம்: 13, கோடுடைத் தலை.

185. இரும்பால் செய்த உயிரோ?

பாடியவர்: பாலைபாடிய பெருங் கடுங்கோ. திணை: பாலை. துறை: பிரிவிடை வேறுபட்ட தலைமகள் தோழிக்குச் சொல்லியது.

(தலைவன் தன்னைப் பிரிந்து சென்றதன் காரணமாக ஏற்பட்ட துயரநோயினால் வாட்டமடைந்து, உடல் நலனும் கெட்டவளான தலைவி ஒருத்தி, தன் தோழியிடம் தன் வருத்தத்தைக் கூறிப் புலம்புகிறாள்.)

        எல்வளை ஞெகிழச் சாஅய், ஆய்இழை
        நல்எழிற் பனைத்தோள் இருங்கவின் அழிய,
        பெருங்கை யற்ற நெஞ்சமொடு நத்துறந்து,
        இரும்பின் இன்உயிர் உடையோர் போல,
        வலித்து வல்லினர், காதலர்; வாடல் 5

        ஒலிகழை நிவந்த நெல்லுடை நெடுவெதிர்
        கலிகொள் மள்ளர் வில்விசையின் உடைய,
        பைதுஅற வெம்பிய கல்பொரு பரப்பின்
        வேனில் அத்தத்து ஆங்கண், வான் உலந்து
        அருவி ஆன்ற உயர்சிமை மருங்கில், 1O
 
        பெருவிழா விளக்கம் போலப், பலவுடன்
        இலைஇல மலர்ந்த இலவமொடு
        நிலையுயர் பிறங்கல் மலைஇறந் தோரே.

‘ஒலிக்கின்ற தன்மையினையும், மேல்நோக்கி உயர்ந்து வளர்ந்த தண்டினையும், நெற்களையும் உடைய நீண்ட மூங்கில்கள் எல்லாம், கோடையின் வெம்மையால் வாடிப்