பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



அகநானூறு - மணிமிடை பவளம்


121. அவளும் வருவாளாம்!


பாடியவர் : மதுரை ம்ருதன் இளநாகனார். திணை: பாலை. துறை: தோழியால், தலைமகளை உடன்வரும் எனக் கேட்ட தலைமகன், நெஞ்சிற்குச் சொல்லியது.

(தலைவியைப் பிரிந்து வெளிநாடு செல்ல நினைத்தான் ஒரு தலைவன். அவளுடைய தோழியின் மூலமாகச் செய்தியைச் சொல்லி அவளிடம் இசைவுபெற முயலுகின்றான். அந்தத் தோழியும் தலைவிபாற் சென்று வந்து, தலைவியும் நின்னுடன் வருவாளாம் என்கின்றாள். அவன், கானகத்தைக் கடந்து சென்று, அதன் கொடுமையையும். முன்பே உணர்ந்திருந்தவன். அதனால், தலைவியின் மடமையான சொற்கள் அவனுக்கு நகைப்பைத் தோற்றுவிக்கின்றன. அவன் தன் நெஞ்சிற்குச் சொல்லுவதாக அமைந்தது இந்தப் பாடல்)

நாம்நகை யுடையம் நெஞ்சே! -கடுந்தெறல்
வேனில் நீடிய வானுயர் வழிநாள்,
வறுமை கூரிய மண்நீர்ச் சிறுகுளத்
தொடுகுழி மருங்கில் துவ்வாக் கலங்கல்
கன்றுடை மடப்பிடிக் கயந்தலை மண்ணிச் 5

சேறுகொண் டாடிய வேறுபடு வயக்களிறு
செங்கோல் வாலினர் தயங்கத் தீண்டிச்
செறிபுறம் உரிஞய நெறியயல் மராஅத்து
அல்குறு வரிநிழல் அசைஇ, நம்மொடு
தான்வரும் என்ப, தடமென் தோளி 10

உறுகண மழவர் உருள்கீண் டிட்ட
ஆறுசெல் மாக்கள் சோறுபொதி வெண்குடைக்
கணைவிசைக் கடுவளி எடுத்தலின், துணைசெத்து
வெருளேறு பயிரும் ஆங்கண்,
கருமுக முசுவின் கானத் தானே. 15

மிக்க கூட்டமான மழவர்கள், தம் தேருருள் உருளும் படியாக உடைத்திட்ட மலையின் வழியிலே செல்லும், சாத்தரது சோறு பொதிந்த பனையோலைக் குடையை, அம்பு போலும் விரைவினையுடைய சூறைக்காற்று எழுப்புகையினாலே உண்டான ஓசையைத் துணையிட்ட கூச்சலென்று கருதி