பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் * 155



        இரவும் இழந்தனள், அளியள்-உரவுப்பெயல்
        உருமிறை கொண்ட உயர்சிமைப்
        பெருமலை நாட-நின் மலர்ந்த மார்பே. 15

கடுமையான மழையுடனே, முழங்கும் இடிகளும் தங்கு தலை உடையதான, உயர்ந்த முடிகளையுடைய பெரிய மலைகள் கொண்ட நாட்டினனே!

வானிலே இட்டுத்தோன்றுகின்ற எய்யப்பெறாத அழகிய வில்லினைப்போல விளங்கும் பசுமையான ஆரத்தைக் கழுத்திலே கொண்ட, சிவந்த வாயையுடைய சிறு கிளியானது, தினைப்பயிர் சிதையும்படியாகக் கொய்து, சுமந்து செல்ல இயலாமல் போட்டுவிட்ட, புல்லிய புறத்தினையுடைய பெரிய தினைக்கதிரினை, வளைந்த சிறகுகளையுடைய கானங்கோழி வ்யானது, தன் இனத்துடனேகூடிக் கவர்ந்து கொண்டுபோகும். அது நிகழுமாறு, தினையும் வளைந்து தலைதாழ்ந்த பெரிய கதிர்களை இக்காலத்தே ஈன்றன.

நள்ளிரவிலே நீயும் வந்து அவளுக்கு அருள்வாய் என்பாயானால், பெரிய மலையின் இருள் பொருந்திய குகையிடங்களைத் துழாவி, அருவியின் ஒய்யென்ற ஒலியுடனே கொண்டுதந்த, பாம்பு உமிழ்ந்த அழகிய மணிகள், பெரிய மலைச்சாரலிலேயுள்ள எமது சிற்றுாரின் தெருக்களை ஒளியுடையதாகச் செய்வதனால், நின் அகன்ற மார்பின் கூட்டத்தினை, அவள் இரவினும் இழந்தவளாவாள்.

பிறைமதியினைப் போன்ற, மாசற்ற ஒளியுடைய அவள் நெற்றி, அதனால் பொன்னையொத்த நிறத்தினையும் கொண்டது அந்தோ! அவள் எங்ஙனம் ஆவாளோ? இரங்கத் தக்கவளே!

என்று, தோழி செறிப்பு அறிவுறீஇ வரைவுகடாயினாள் என்க.

சொற்பொருள்: 1. மதியரும்பு - பிறைமதி. சுடர் நுதல் - ஒளிசிதறும் நெற்றி, 2.பொன்நேர் வண்ணம் கொண்டது. பசலை பாய்ந்தது. 4 வரிவில் - வானவில், 5. செவ்வாய் - சிவந்தவாய். 6. பொறை - பொறுத்தல்; சுமத்தல். 7. வாரணம் - கானங்கோழி. 8. இறங்குபொறை உயிர்த்தன. கதிர்கள் முற்றி வளைந்து தாழ்ந்தன. 10.மைபடு-இருள்படு பிடவரகம் - குகையிடம்.12. மறுகு - தெரு. 13. உரவுப் பெயல் - கடும் பெயல்,

விளக்கம்: ‘ஏனல் பொறை உயிர்த்தன என்றதால், தலைவி இற்செறிக்கப் பட்டமை கூறினாள். அதனால் பகற்குறி