பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

158

அகநானூறு - மணிமிடை பவளம்



194. கார் காலம் இதுதானே!

பாடியவர்: இடைக்காடனார். திணை: முல்லை. துறை: பருவங்கண்டு ஆற்றாமை மீதுரத் தலைமகள் சொல்லியது.

(வேந்து வினைமுடித்தலுக்காகத் தன்னுடைய காதல் தலைவியைப் பிரிந்து வேற்றுநாடு சென்றவன் தலைவன். அவளிடம் விடைபெறுங் காலத்திலே, கார்காலத்து வருவதாக உரைத்த உறுதியை அவன் பொய்த்துவிட்டான். கார்காலம் வந்தும், அவன் வரவை அவள் பெற்றிலள். அதனை நினைந்து இப்படித் தன் தோழியிடம் கூறிப் புலம்புகிறாள்-)

        பேர்உறை தலைஇய பெரும்புலர் வைகைறை,
        ஏர்இடம் படுத்த இருமறுப் பூழிப்
        புறமாறு பெற்ற பூவல் ஈரத்து,
        ஊன்கிழித் தன்ன செஞ்சுவல் நெடுஞ்சால்,
        வித்திய மருங்கின் விதைபல நாறி, 5

        இரலைநல் மானினம் பரந்தவை போலக்,
        கோடுடைத் தலைக்குடை சூடிய வினைஞர்,
        கறங்குபறை சீரின் இரங்க வாங்கி,
        களைகால் கழிஇய பெரும்பீபன வரகின்
        கவைக்கதிர் இரும்புறம் கதூஉ உண்ட, 10

        குடுமி நெற்றி, நெடுமாத் தோகை
        காமர் கலவம் பரப்பி, ஏமுறக்
        கொல்லை உழவர் கூழ்நிழல் ஒழித்த
        வல்லிலைக் குருந்தின் வாங்குசினை இருந்து,
        கிளிகடி மகளிரின் விளிபடப் பயிரும் 15

        கார்மன் இதுவால்-தோழி!-போர்மிகக்
        கொடுஞ்சி நெடுந்தேர் பூண்ட, கடும்பரி,
        விரிஉளை, நல்மான கடைஇ
        வருதும் என்று, அவர் தெளித்த போழ்தே.

தோழி! 'போர் மிகுதியாக மூண்டுவிட்டது. அதற்கு யான் செல்லவேண்டும். கொடுஞ்சியையுடைய நெடிய தேரிலே பூட்டம் பெற்றிருக்கும், விரைந்து செல்லும் இயல்பினையும் விரிந்த பிடரிமயிரினையும் உடைய நல்ல குதிரைகளைச் செலுத்திக் கொண்டு, சென்று கார்காலத்தில் தவறாது மீண்டு வருவேன்’ என்று கூறி, அந்நாள் அவர் நம்மைத் தெளிவித்தாரே!

பெருமழை பெய்த, பேரிருள் புலர்கின்ற காலைப் பொழுதிலே, ஏர்களால் உழுது இடம்படுத்த, இருமருங்கிலும்