பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் ★ 3


11. உறுகண மழவர் - மிக்க கூட்டமான மழவர் மழவர், இவர் ஒரு போர்மறக் குடியினர்; இவர்கள் தலைவனாக அதிகமான் உரைக்கப்படுவான்.12. வெண்குடை-வெள்ளிய பனையோலைக் குடை சோறுண்ட பின் கழித்துப் போடப்பட்டிருக்கும் குடை முசு - குரங்கினத்துள் ஒன்று.

விளக்கம்: சேறு கொண்டு ஆடியதனால் மட்களிறு போலத் தோன்றலின் வேறுபடு களிறு (6) என்றார்.

உள்ளுறை பொருள் : களிறு, தன். பிடியை மண்ணியும், ஏறு தனது துணையைப் பயிர்ந்தும் அவற்றினைத் தலையளி செய்தாற்போல, யாமும் தலைவியைத் தலையளி செய்யா நிற்பேம் என்று தலைமகன் தன் நிலைமை தோன்றக் கூறினானாகவும் கொள்க.

மேற்கோள் : “உடன் சேறல் செய்கையொ டன்னவை பிறவு ‘மடம்பட வந்த தோழிக் கண்ணும்' என்னும், ‘கரணத்தின் அமைந்து முடிந்த காலை’ என்னும் கற்பியற் சூத்திரப் பகுதியில், தலைமகன் தன் நெஞ்சிற்குக் கூறியதாக நச்சினார்க்கினியர் இதனைக் கொள்வர்.

'எள்ளல் இளமை பேதைமை மட்னென்றுன்னப்பட்ட நகை நான்கென்ப’ என்னும் மெய்ப்பாட்டியற் சூத்திரத்துப் பிறர்மடம் பொருளாக நகை தோன்றற்கு, ‘நாம் நகையுடையம் நெஞ்சே. தான் வருமென்ப தடமென் 'தோளி’ என்பதனை உதாரணமாகவும்,

'பன்றி புல்வா யுழையே... ஏறெனற்குரிய' என்ற மரபியற் சூத்திரத்துப் புல்வாய் ஏறெனப்பட்டதற்கு ‘வெருளேறு பயிரும் ஆங்கண்’ என்பதனை உதாரணமாகவும் பேராசிரியர் கொள்வர்.

பாட பேதங்கள்: 1. நாணகை யுடையம் நெஞ்சே கடுந்திறல் 3. வறுமை கூறிய மண்ணிர்ச் சிறுகுளத் 11. உறுகண், உறுகணை, ஊறுகணை மழவர். 13. கன்மிசை, கனைவிசை,

122. பற்பல தடைகள்

பாடியவர்: பரணர் திணை: குறிஞ்சி. துறை: (1) தலை மகன் சிறைப்புறத்தான் ஆகத் தோழிக்குச் சொல்லுவாளாய்த் தலைமகள் சொன்னது. (2) தோழி சொல்லெடுப்பத் தலைமகள் சொல்லியது உம் ஆம். சிறப்பு: சோழமன்னன். தித்தனின் உறந்தைப் புறங்காடு.

(இரவுக் குறியிலே உறவாடிவரும் தலைவியும் அவள் தோழியும் வந்து குறியிடத்திலே காத்திருக்கின்றனர். தலைவன்