பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

168

அகநானூறு - மணிமிடை பவளம்


யிரவிலே, பெய்து கொண்டிருக்கும் மிகுதியான மழையிலே, மறைந்து மறைந்தும் வந்தாள். கார்காலத்து நறுமணம் கமழுகின்ற கூந்தலுடன், தூய்மையான செய்வினை பொருந்திய நுண்மையான நூலால் நெய்யப்பட்ட ஆடை தன் உடம்பிடத்தே பொருந்தியவளாக, மலைச்சாரலின் கண்ணே, இளமழையினைக் கருதிய மடமயிலினைப் போல, வண்டுகள் பின் தொடர்ந்து வருமாறு குளிர்ந்த மலர்களைச் சூடியவளாக, ஒயிலுடன் அவளும் வந்தாள். வில்லினைப் போன்றதாக வளைந்த, வகையமைந்த நல்ல முறையிலே செய்யப்பெற்ற, குடச்சூல் ஆகிய தன் சிலம்புகளையும் ஒலியெழாத வண்ணம் அடக்கியவளாக, அஞ்சி அஞ்சி மெல்லென நடந்து வந்தாள். ஊர் முழுவதும் உறங்கிக் கொண்டிருக்கின்ற நள்ளிரவான யாமத்திலே, அங்ஙனம் வந்து நம்மைத் தழுவினாள்; தன் வீட்டிற்கு மீண்டும் பெயர்ந்து சென்றாள். அவள் -

நிறைந்த கற்பினாலே உயர்ந்த பெருமையுடையவளான, அழகிய மாமை நிறத்தினையுடைய பெண்ணே என்றால், அவள் அத்தகைய சாதாரணப் பெண் அல்லள்!

தென்னாட்டின்கண் உள்ளதாகிய ஆய் என்பவனது நல்ல நாட்டிலே, தெய்வங்களை உடைய மலைச்சாரல்களிலே, ‘கவிரம்’ என்னும் பெயரையுடைய அச்சம் கெழுமிய பக்கமலையிலே, நேரிய மலர்கள் நிறைந்துள்ள சுனையிலே வாழ்பவளான சூரர மகளிருள் ஒருத்தியே அவள் என்று யாம் சொல்வோம். -

என்று, புணர்ந்து நீங்கிய தலைமகளது போக்கு நோக்கிய தலைமகன் தன் நெஞ்சுக்குச் சொன்னான் என்க.

சொற்பொருள்: 2.கரந்த காமம்-உள்ளத்து நிறைந்து புறத்தே புலப்படாது நிலவிய காமம். கைநிறுக்கல்லாது - கட்டுப்படுத்தி வைக்க இயலாது. 3. விட்ட நன்மொழி - விட்டதூது; அது தோழியின் மூலம் உரைத்தது என்று கொள்க. 4. அரை நாள் யாமம் - நள்ளிரவு வேளையாகிய இரவின் நடுச்சாமம். 4-5 விழுமழை கரந்து கார் விரை கமழும் - பெய்த மழையானது நின்று கார்காலத்தின் மண் வாடை கமழ்ந்து கொண்டிருக்கும் தன்மைபோன்று மணங்கமழும் என்றும் கொள்ளலாம். 6. நுண் நூல் நுண்மையான நூலால் நெய்த ஆடை நூலின் நுண்மையே ஆடையின் மென்மைக்குக் காரணமாகும் என்பதையும் நினைக்கவும். 7. இளமழை சூழ்ந்த மடமயில் நடனமாடி ஒயிலுடன் விளங்குவதுபோல, அவளும் எழில்மிகு சாயலுடன் வந்தனள் என்க. 8. வழிப்படர தொடர்ந்து