பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

176

அகநானூறு - மணிமிடை பவளம்


17. குவவு மயிர்-அடர்ந்திருக்கும் மயிர்18, தோல் முலை-திறங்கிய முலை. பிணவு கரடியின் பெண்.

உள்ளுறை: பெருங்கை எண்கின் பேழ்வாய் ஏற்றை இருள் துணிந்தன்ன குவவுமயிர்க் குருளை தோன்முலைப் பிணவொடு திணைக்கும் வேனில் என்றது, அவ்வாறே தலைவனும் நின்னைத் தழுவி மகிழ்விப்பான் என்பதாம்.

விளக்கம் : கரடியின் குடும்பபாசம் இவரையும் நின்பாற் பாசமுடையவராக விரைந்து திரும்பத் தூண்டிவிடும் என்றனள். உவாநாள் - பெளர்ணமி நாள்; அந்நாளிலே கடல் பொங்கும் என்பது மரபு.

202. தேராது வருவாய் நீ!

பாடியவர்: ஆவூர்கிழார் மகனார் கண்ணனார். ஆவூர்கிழார் மள்ளனானார் என்பதும் பாடம். திணை: குறிஞ்சி. துறை: இரவுக்குறிக்கண் வந்து நீங்கும் தலைமகனுக்குத் தோழி சொல்லி வரைவுகடாயது.

(தலைவன், இரவுக்குறியிலே வந்து தலைவியைக் கூடி இன்புறும் களவு உறவினையே மேற்கொண்டு வருகின்றான். அவன் மனம், தலைவியை மணந்து கொள்வதிலே ஈடுபடல் வேண்டும் என்று கருதும் தோழி, அவனிடம் இப்படி உரைக்கின்றாள்.)

        வயங்குவெள் அருவிய குன்றத்துக் கவாஅன்,
        கயந்தலை மடப்பிடி இனன் ஏமார்ப்பப்,
        புலிப்பகை வென்ற புண்கூர் யானை
        கல்லகச் சிலம்பில் கைஎடுத்து உயிர்ப்பின்.
        நல்இணர் வேங்கை நறுவி கொல்லன் 5

        குருகுஊது மிதிஉலைப் பிதிர்வின் பொங்கி,
        சிறுபல் மின்மினி போலப், பலஉடன்
        மணிநிற இரும்புதல் தாவும் நாட!
        யாமே அன்றியும் உளர்கொல்-பானாள்,
        உத்தி அரவின் பைத்தலை துமிய 1O

        உரஉரும் உட்குவரு நனந்தலைத்,
        தவிர்வுஇல் உள்ளமொடு எஃகு துனையாகக்,
        கனைஇருள் பரந்த கல்லதர்ச் சிறுநெறி
        தேராது உரூஉம் நின்வயின்
        ஆர்அஞர் அரும்படர் நீந்து வோரே? 15