பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் ★ 211


சேர்ந்து கமழுகின்ற தண்மையான பெரிய மலைச் சாரலினிடத்தே, இனிப் பகற்போதிலேயே வந்து அருள்வாயாக.

என்று, தோழி தலைமகளை இடத்துய்த்து வந்து, பகற்குறி நேர்ந்த வாய்பாட்டால், தலைமகனை வரைவுகடாயினாள் என்க.

சொற்பொருள்: 1. கிளை - இனம். கடுநடை - விரைந்த நடை வயக்களிறு - வலிமையுள்ள தலைமை யானை. 2. முளை மூங்கில் முளை. குளகு தழை. 4. பரூஉ உறை பெரிய துளிகளாகப் பெய்யும் மழை, வான் நவின்று - வானிலே பயின்று. 5. வட்டித்தல் - சூழ்ந்து கொள்ளல். 6. புயலேறு இடியேறு. வியலிருள் நடுநாள் - இருள்மிகுந்த நள்ளிரவு 7 விறல் - மேம்பாடு 9, படா அவாகும் - மூடாதனவாகும். 10, இயவுக் கெடுதல் - வழி தடுமாறுதல் 16. அடைய முயங்குதல் - உடலிறுகத் தழுவுதல். 20. தோன்றி - தோன்றிப்பூ

உள்ளுறை: யானை தான் இன்புறுவதோடல்லாது தன் கிளைகளையும் உண்பித்துப் போற்றுவதுபோல, நீயும் இவளை மண்ந்து இல்லறம் பேணிச் சுற்றத்தார் மகிழுமாறு விருந்தருந்தி வாழ்தல் வேண்டும் என்பதாம்.

விளக்கம்: இரவுக்குறியிலே அவன் வரும் வழியின் துன்பம் கூறினாள், தாம் அதுபற்றிப் பெரிதும் துன்பத்திற்கு உள்ளானதை உணர்த்தும் பொருட்டாக, ‘அன்னை அறியினும் அறிக அலர் வாய் அம்பல் மூதூர் கேட்பினும் கேட்க’ என்றதனால், பகற்குறி வாய்ப்பதன் அருமையையும் குறிப்பாகப் புலப்படுத்தினாள். இதனால், விரைந்து வரைந்து கோடலை வற்புறுத்தினாள் என்க.

மேற்கோள்: இது, குறிஞ்சிக்கு முதலும் கருவும் வந்து உரிப்பொருளால் சிறப்பு எய்தி முடிந்தது என, முதல் கரு உரிப் பொருள்’ என்னும் சூத்திர உரையிலே நச்சினார்க்கினியர் காட்டினர்.

பாடபேதங்கள்: 2 குளகு அருந்த 12. வரல் அரிது என்னாய். 20-21 தோன்றல் ஒண்பூ

219. யானே வருந்துவேன்!

பாடியவர்: கயமனார். திணை : பாலை. துறை: மகட் போக்கிய தாய் சொல்லியது.

(தன் மகள் தன் காதலனுடன் உடன் போக்கிலே சென்று விட, அதனால் உள்ளம் வருத்தி நலிந்தனள் தாய். அப்பொழுது, அவளுடைய உள்ளம் தன் மகள் காதலனோடு சென்றுவிட்ட