பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் ★ 225




‘பூவாற் புனைதலையுடைய மழைமேகம்’ என்று சொல்லுமாறு தழைத்துத் தொங்கும் கருமையான கூந்தலையும் செறிவுடைய வளையல்களை அணிந்துள்ள முன்கையினையும் உடையவள் நம் காதலி, அவளுடைய அறிவு கலங்கிய பார்வையினையும் ஊடலினையும் நினைந்து வருந்தியவாறே, நெஞ்சமே, நாம் தனியாகத் தங்கி இருப்போமோ?

என்று,பொருள் கடைக்கூட்டிய நெஞ்சிற்குத் தலைமகன் சொல்லிச் செலவழுங்கினான் என்க.

சொற்பொருள்: 1 அன்பு உள்ளம் கலந்த ஒருமை நெகிழ்ச்சி. மடன் - எவ்வித ஆய்வும் இன்றித் தான் கொண்டதே உறுதியாகப் போற்றும் தன்மை. சாயல் - மென்மையின் எழில். இயல்பு - ஒழுக்கம். 2. பிறவும் - குடும்பப் பெண்களுக்கு இருக்கவேண்டிய பிற பண்புகளும். 3. ஒன்றுபடுகொள்கை - ஒன்றுபட்டுச் சேர்ந்திருத்த லாகிய ஒரு கோட்பாடு முயங்கி தழுவி, 5. புதல் இவர் - புதராகப் படர்ந்திருக்கும். ஆடு.அமை - அசையும் மூங்கில். குயின்ற துளைத்த. 6. அகலா அகற்சியில்லாத நீங்காதிருப்பதும் ஆம். அந்துளை அழகிய துளை. கோடை - மேல் காற்று. 7. வார்கோல் ஆயர்கள் கையிலுள்ள நீண்ட கவைக்கோல், 9. தேக்கு அமல் தேக்கு செறிந்துள்ள கடறு கற்காடு10. தூணி - அம்பறாத் தூணி. 14. பூப்புனை புயல் - புயல் பூவினைப் புனைந்துள்ளது போல விளங்கும். புயல் - மழைமேகம்.15. ஒலிவரும் தழைத்திருக்கும்.16. செறிதொடி - செறிந்துள்ள வளைவுகள், செறிவு, காதலனுடனிருக்கும் பூரிப்பினால் அமைவது. 17. அஞர்தல் - கலங்குதல். புலவி ஊடல்.

விளக்கம்: கூந்தலையும், செறி தொடி முன் கையினையும், அறிவஞர் நோக்கத்தையும், புலவியையும் நினைந்து இருப்போமோ என்றது, அவளைப் பிரிந்திருக்க முடியாத தன் தன்மையைக் கூறியதாகும்.

226. அலர் பெரிதாயிற்றே!

பாடியவர்: பரணர். திணை: மருதம். துறை: தலைமகற்குத் தோழி வாயில் மறுத்தது. சிறப்பு: கழார் முன்துறைக்கு உரியவனாகிய மத்தி என்பவன்; பாணனொடு வந்த கட்டி என்பான் தித்தன் வெளியனின் அவையிலே வந்து போரிடுதற்கு அஞ்சி ஒடிய செய்திகள்.

(தலைவியோடு கூடி இன்புற்று வாழ்தலைக் கைவிட்டுப் பரத்தையர் உறவிலே ஈடுபட்டிருந்தான் ஒரு தலைவன். அதனால்