பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

226

அகநானூறு - மணிமிடை பவளம்


ஊரிலே பழிச்சொற்கள் மிகுதியாக எழுந்தன. ஒரு நாள், அவன் மனைவியிடத்துக்கு வருதலை விரும்பிச் செய்தியைத் தலைவியின் தோழியிடம் கூறினபோது, அவள் மறுத்துச் சொல்லுகின்றாள்.)

        உணர்குவென் அல்லென்; உரையல்நின் மாயம்;
        நாணிலை மன்ற-யாணர் ஊர!-
        அகலுள் ஆங்கண் அம்பகை மடிவைக்,
        குறுந்தொடி, மகளிர் குரூஉப்புனல் முனையின்,
        பழனப் பைஞ்சாய் கொழுதிக் கழனிக் 5

        கரந்தைஅம் செறுவின் வெண்குருகு ஒப்பும்,
        வல்வில் எறுழ்த்தோள் பரதவர் கோமான்,
        பல்வேல் மத்தி கழாஅர் முன்துறை,
        நெடுவெண் மருதொடு வஞ்சி சாஅய்,
        விடியல் வந்த பெருநீர்க் காவிரி, 10

        தொடிஅணி முன்கை நீ வெய் யோளொடு
        முன்நாள் ஆடிய கவ்வை இந்நாள்,
        வலிமிகும் முன்பின் பாணனொடு மலிதார்த்
        தித்தன் வெளியன் உறந்தை நாளவைப்
        பாடுஇன் தெண்கிணைப் பாடுகேட்டு அஞ்சி 15

        போரடு தானைக் கட்டி
        பொராஅது ஓடிய ஆர்ப்பினும் பெரிதே.

புது வருவாயினை உடைய ஊரனே! நின்னுடைய மாயமான பேச்சுக்களை நீ சொல்லவேண்டாம். அவற்றை உண்மையென யான் ஏற்றுக் கொள்ளவும் மாட்டேன். நினக்கு நாணமும் இல்லாது போயிற்றோ?

அழகிய பகுப்பையுடைய தழை உடையினையும் குறுந் தொடியினையும் உடைய இளமகளிர்கள், அகன்ற ஊரினிடத்தே விளங்கும் புதுப்புனல் விளையாட்டிலே ஈடுபடுவார்கள். அதுவும் வெறுத்ததென்றால், பொய்கையிலுள்ள பைஞ்சாய்க் கோரைகளைக் கோதிக், கழனியாகிய கரந்தையையுடைய வயல்களிலேயுள்ள வெண்ணிறமுள்ள நாரைகளை ஒட்டிக் கொண்டிருப்பார்கள்.அத்தகைய இடமாகிய, வலியவில்லானது விளங்கும் வலிபொருந்திய தோள்களையுடையவனும், பரதவர்களின் கோமானுமாகிய, பலவேற்படையினரையும் உடைய மத்தி என்பவனது, கழாஅர் என்னும் ஊரின் துறையின் முன்னே -