பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

230

அகநானூறு - மணிமிடை பவளம்


தனித்து வாடி வருந்த, 9. ஒருத்தல் - தலைமையுடைய களிறும் ஆம்.1 மள்ளர்-வீரர்.14.இமிழ் இசைமுரசு - புகழினை முழக்கும் முரசு, வெற்றி முரசும் கொடை முரசும் கொள்ளப்படும். 10. தூங்கல் - தூங்கல் ஒரியார் என்னும் புலவர்; இவர் பாடிய பாட்டுக் கிடைத்திலது. 17. போர்ப் புண்கள் யானை மிதித்த வழுதுணங்காய்போல உடலெங்கும் விளங்குதலால் தழும்பன் எனப் பெயர்பெற்றனன். 21. எல் உமிழ் - ஒளி வீசுதல்; அது நவமணிக் கடைகள் மலிந்துள்ளதால் இருக்கலாம்.

விளக்கம்: ‘பிரியேன்' என்று தலையளி செய்த காலத்துச் செய்த உறுதியும், பிரிந்த காலத்து வருவேன் எனக் குறித்த காலமும் பொய்த்தான். ஆதலின், அதனால் அவன் இடையூறு நேர்தல் கூடாது என வாழ்த்துவாளாக, நோயிலராக நிலைஇ’ என்றனள். இதனைத் தலைவி சொன்னதாகக் கொள்வதே சிறப்பாகும். பகையற்றபோதும் வேங்கையோடு வறிதாகப் போரிட்டுத் துயருற்ற களிற்றின் மயக்கத்தைப் போன்றதே தலைவனின் பொருளார்வமும் என்றனள்.

மேற்கோள்: மங்கலமொழி என்றதற்குத் தலைவற்குத் தீங்கு வரும் என்று உட்கொண்டு, தோழியும் தலைவியும் அதற்கு அஞ்சி அவனை வழுத்தலும் என்று பொருள் கூறி, ‘நோயிலராக நம் காதல்’ என்பதனை, மங்கல மொழியும்’ என்னும் சூத்திர உரையிலே நச்சினார்க்கினியர் காட்டினர்.

பாடபேதங்கள்: 3. பன்னாள் நீர்மலி. 17. பிடிமகிழ் உறுதுணை. 19. விழவுறு திருநகர்.

228. இரவிற் செல்வராயின் நன்று

பாடியவர்: அண்டர் மகன் குறுவழுதியார். திணை: குறிஞ்சி. துறை: தலைமகன் சிறைப்புறத்தானாகத் தலை மகட்குச் சொல்லுவாளாய்த் தோழி சொல்லியது.

(தலைமகனும் தலைமகளும் களவு ஒழுக்கத்திலே ஈடுபட்டிருக்கும் காலத்து, ஒருநாள் அவன் சிறைப்புறமாக இருப்ப, இரவுக் குறியிடத்தே தலைவியைக் சேர்ந்த தோழி, அவனும் கேட்குமாறு, அவளுக்குச் சொல்லுவதுபோலச் சொல்லுகிறாள். பகற்குறி வேட்டது போலக் கூறினும், வரைந்து கொள்ளத் தூண்டுதலே கருத்தாகக் கொள்க.)

        பிரசப் பல்கிளை ஆர்ப்பக், கல்லென
        வரைஇழி அருவி ஆரம் தீண்டித்
        தண்என நனைக்கும் நனிர்மலைச் சிலம்பில்,