பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

232

அகநானூறு - மணிமிடை பவளம்


கொள்ளுதலையே குறித்தனள் என்க. வேங்கை ஒள்வி ‘தோன்றலின்’ என்றதால், அது மணநிகழ்விற்குரிய காலமாதலையும் புலப்படுத்தினள்,

229. இளவேனிலும் வாரார்!

பாடியவர்: மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார். திணை: பாலை. துறை: தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகளை வற்புறுத்தும் தோழிக்குத் தலைமகள் வன்புறை எதிரழிந்து சொல்லியது. -

(தலைமகன் திரும்பி வருவதாகக் குறித்த கார்காலம் வந்து கடந்து போயிற்று. பின்னரும், இடைப்பட்ட காலம் பலவும் கடந்துபோக, இளவேனிலும் வந்தது. அதனால், தலைவியின் ஏக்கமும், நலிவும் மிகவும் பெரிதாயிற்று. அது கண்டு வருந்திய தோழி, தலைவன் வருவான்’ எனக் கூறித் தலைவியைத் தேற்றுவதற்கு முயல, அவள் இப்படிக் கூறுகின்றாள்.)

        பகல்செய் பல்கதிர்ப் பருதியம் செல்வன்
        அகல்வாய் வானத்து ஆழ் போழ்ந்தென,
        நீர்அற வறந்த நிரம்பா நீளிடைக்
        கயந்தலைக் குழவிக் கவிஉகிர் மடப்பிடி
        குளகுமறுத்து உயங்கிய மருங்குல் பலவுடன் 5

        பாழுர்க் குரம்பையின் தோன்றும் ஆங்கண்,
        நெடுஞ்சேண் இடைய குனறம் போகி,
        பொய்வ லாளர் முயன்றுசெய் பெரும்பொருள்
        நம்இன்று ஆயினும் முடிக, வல்லெனப்,
        பெருந்துணி மேவல்!-நல்கூர் குறுமகள்!- 10

        நோய்மலிந்து உகுத்த நொசிவரல் சில்நீர்
        பல்லிதழ் மழைக்கண் பாவை மாய்ப்பப்,
        பொன்னேர் பசலை ஊர்தரப், பொறிவரி
        நல்மா மேனி தொலைதல் நோக்கி,
        இனையல் என்றி; தோழி! சினைய 15

        பாசரும்பு ஈன்ற செம்முகை முருக்கினப்
        போதவிழ் அலரி கொழுதித், தாது அருந்து,
        அம்தளிர் மா அத்து அலங்கல் மீமிசைச்,
        செங்கண் இருங்குயில் நயவரக் கூஉம்
        இன்இள வேனிலும் வாரார், 20

        ‘இன்னே வரும்' எனத்தெளித் தோரே,