பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

234

அகநானூறு - மணிமிடை பவளம்



சொற்பொருள்: 1. பருதி அம் செல்வன் - ஞாயிறாகிய அழகிய செல்வன். 2. அகல்வாய் வானம் - அகன்ற இடத்தை யுடைய வானம். 4 கவியுகிர் - குவிந்திருக்கும நகம், மடப்பிடி - இளைய பிடி, 5. குளகு தழை. மறுத்து - தின்னமறுத்து. மருங்குல் - பக்கம்; உடலின் பகுதிகளைக் குறித்தது.10. குறுமகள் - இளைய மகள். நல்கூர் குறுமகள் - தவமிருந்து பெற்ற செல்வ மகள்; குறுமை இளமை குறித்தது. 11. நொசிவரல் - கொஞ்சங் கொஞ்சமாக வருகின்ற தன்மையுடைய 12. பல்லிதழ் - பல இதழ்களையுடைய தாமரை மலரைக் குறித்தது. பாவை கண்ணின் பாவை. 14. நன்மா மேனி - நல்ல சிறந்த மேனி. 15. இனையல் - வருந்தாதே 16. பாசரும்பு - பசுமையான அரும்பு. செம்முகை - செந்நிற மொட்டுக்கள். 17. அலரி - அலர்ந்த பூக்கள். அலங்கல் - அசையும் கிளைகள். 19. இருங்குயில் - கருங்குயில். 21. இன்னே - இப்பொழுதே விரைவில் வருவேம் என்றதைச் சுட்டியது. - -

விளக்கம்: ‘இன்னே வருதும் எனப் புகன்று சென்ற பொய்வலாளர், இளவேனில் வந்தபின்னும் வரவில்லை யென்றால், நின் சொற்கேட்டு யானும் தேறியிருப்பதுதான் எவ்வாறோ?’ எனத் தோழியிடம் தலைவி கூறுவதாகக் கொள்க. ‘நம்மின்றாயினும் என்றது, தான் இறந்து படுவதே நிகழுமெனக் கூறியதாம்.

230. தலை கவிழ்ந்தாள்!

பாடியவர்: மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார். திணை: நெய்தல். துறை: தலைமகளைக் கண்ணுற்று நீங்கும் தலைமகள், தன் நெஞ்சிற்குச் சொல்லியது.

(கடற்கரை நாட்டுத் தலைவன் ஒருவன், தான் தேர் ஊர்ந்து வரும்வழியே ஒரு நங்கையைக் கண்டு காதலித்தான். பின்னர் அவன், அந்த நிகழ்ச்சியைத் தன் நெஞ்சிற்கு இப்படிச் சொல்லிக் கொள்ளுகின்றான்.)

        ‘உறுகழி மருங்கின் ஒதமொடு மலர்ந்த
        சிறுகரு நெய்தற் கண்போல் மாமலர்ப்
        பெருந்தண் மாத்தழை இருந்த அல்குல்,
        ஐய அரும்பிய சுணங்கின் வைஎயிற்று,
        மைஈர்ஒதி, வாள் நுதல் குறுமகள்! 5

        விளையாட்டு ஆயமொடு வெண்மணல் உதிர்த்த
        புன்னை நுண்தாது பொன்னின் நொண்டு,
        மனைபுறந் தருதி ஆயின், எனையதுஉம்,