பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10

அகநானூறு - மணிமிடை பவளம்


முற்றத்தின்கண் ஒலியா நிற்கும், ஒழுங்குபட்ட நிலைமையினையுடைய மதிலுறுப்பாற் சிறந்த நெடிய மதிலையுடைய ஊர்க்கு மாலையிலே சென்றடையக் கடாவுவாயாக என்று, தலைமகன் தேர்ப்பாகற்கு உரைத்தான் என்க.

சொற்பொருள்: 1. நன்கலம்- நல்ல ஆபரணங்கள். நண்ணார் - பகைவர். 2. வழிமொழிந்து - வழிபாடு சொல்லி. 4. நிலம் வகுத்துறா ஈண்டிய நிலத்தை வகுத்துக்கொண்டு ஒன்று கூடிய படைகள் அணிவகுத்து நிற்கும் நிலையைக் குறிப்பிடுவது இது. 5. வாய்வது - பெரிதும் மெய்யாகும். 6. மாடமாண் நகர் - மாடங்களால் மாட்சிமைப்பட்ட மாளிகை. பாடு அமை சேக்கை - செவ்வியமைந்த பள்ளி, 7. துனிதீர் - வெறுப்புத்தீர்ந்த, 8. வீட ஒழி. புனை - படை - அலங்கரித்த பல்லணம். 10.சுவல் - பிடரிமயிர். 10. கைகவர் - கை விரும்புகின்ற 11. அவிழ்ந்த மலர்ந்த, 11. வீ - மலர் 14. பணை - முரசம். 15. அரமியம் - நிலாவொளி முற்றம், 16 நிரை நிலை ஞாயில் - ஒழுங்குப்பட்ட நிலைமையுடைய மதிலுறுப்பு. .

மேற்கோள்: ‘அரமிய வியலகம் என்பதனைச் சிதைந்தன வரினும் இயைந்தன வரியார்’ என்னுஞ் சொல்லதிகாரச் சூத்திரத்துக் காட்டுவதுடன்,

‘நன்கலங்...வழிமொழிந்து’ என்பதனை, மேலோர் முறைமை நால்வர்க்கும் உரித்தே’ என்னும் பொருளியற் சூத்திரவுரையிற் காட்டி, நன்கலந் திறை கொடுத்தோ மென்றலின், பகைவயிற் பிரிவே பொருள் வருவாயாயிற்று என்றும் நச்சினார்க்கினியர் கூறுவர்.

பாடபேதங்கள்: 4. நிலம் வருத்துறாஅ. 6. மாடமாநகர். 9. பொன்னயிற்.

125. ஓடுவாய் வாடையே!

பாடியவர்: பரணர். திணை: பாலை. துறை: (1) தலைமகன் வினைமுற்றி மீண்டமை உணர்ந்த தோழி தலைமகளுக்குச் சொல்லியது. (2) தலைமகன் வினைமுற்றி மீண்டமை தோழி உணரத் தலைமகள் சொல்லியது. சிறப்பு: கரிகால் வளவனோடு வாகைப்பறந்தலையிலே போரிட்டுத் தோற்ற ஒன்பதின்மரைப் பற்றிய செய்தி.

(தலைமகன் பிரிந்தான். அவன் மீண்டு வருவதாகக் கூறிய கார்காலமும் வந்தது. வாடையின் வருத்தமோ மிகுதியாயிற்று. அதனால் தலைவி வருந்தினாள். அவன் வினைமுடித்து வந்ததும், அதனை அறிந்தவள் வாடையை விளித்துக் கூறுவதாக அமைந்தது