பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

236

அகநானூறு - மணிமிடை பவளம்



விளக்கம்: அவள் தலையைச் சிறிய அளவிலே கவிழ்ந்தனள், அது, அவளும் அதற்கு ஆர்வம் உடைமையைத் தெரிவித்த தனால், அவள் நினைவினால் யாம் இவ்விடத்தே பெரிதான துன்பம் அடைந்தோம் என்றனன். “துன்பம்’, அவளை அடைய விரும்பியதனாலே பெருகிய காமநோய். -

மேற்கோள்: ‘கைப்பட்டுக் கலங்கினும் என்னும் துறைக்கு, இதனை, மறைந்தவற் காண்டல் என்னும் சூத்திர உரையிலே காட்டு, இது தலைவன் கூறியது என்பர் நச்சினார்க்கினியர்.

231. கூந்தன் மரீஇயோர்!

பாடியவர்: மதுரை ஈழத்துப் பூதன்றேவனார். திணை: பாலை. துறை: தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலை மகட்குத் தோழி சொல்லியது. சிறப்பு: பசும்பூண் பாண்டியன் காலத்து மதுரையின் வளம்.

(தலைவனின் பிரிவாற்றாமை காரணமாக வாடி மெலிந்தனள் தலைவி. அவளுக்குத் தேறுதல் கூறுபவளாகத் தோழி இப்படி உரைத்துத் தலைவன் தவறாது வருவான்’ என்ற உறுதியையும் கூறுகின்றாள்.)

        ‘செறுவோர் செம்மல் வாட்டலும், சேர்ந்தோர்க்கு
        உறுமிடத்து உவக்கும் உதவி ஆண்மையும்,
        இல்லிருந்து அமைவோர்க்கு இல் எனறு எண்ணி,
        நல்லிசை வலித்த நாணுடை மனத்தர்
        கொடுவிற் கானவர் கணைஇடத் தொலைந்தோர், 5

        படுகளத்து உயர்த்த மயிர்த்தலைப் பதுக்கைக்
        கள்ளியம் பறந்தலைக் களர்தொறும் இழீஇ,
        உள்ளுநர்ப் பனிக்கும் ஊக்கருங் கடத்திடை
        வெஞ்சுரம் இறந்தனர் ஆயினும் நெஞ்சுருக
        வரும்-வாழி; தோழி!- பொருவர் 10

        செல்சமம் கடந்த செல்லா நல்லிசை,
        விசும்பிவர் வெண்குடைப், பசும்பூட் பாண்டியன்
        பாடுபெறு சிறப்பின் கூடல் அன்னநின்
        ஆடுவண்டு அரற்றும் முச்சித்
        தோடுஆர் கூந்தல் மழீஇ யோரே. 15

தோழி! நீ வாழ்வாயாக!

பகைத்து வந்தோரின் செருக்கினை அழித்தலும், வந்து சேர்ந்தோர்களுக்கு ஒரு துன்பம் வருமிடத்து உதவி செய்யும்