பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் ★ 237


ஆண்மையும், வீட்டிலேயே இருந்துகொண்டு, பொருளீட்டல் முயற்சிகளைக் கைவிட்டிருப்பவர்க்கு இல்லையாகும்; இப்படி எண்ணி, நல்ல புகழ் ஆர்வமானது எழுந்த, நாணம் கொண்ட உள்ளத்தவராயினர் நம் தலைவர்.

வளைந்த வில்லையுடைய காணவர் அம்பினை எய்ய, அதனால் வீழ்ந்துபட்டோர் கிடக்கும் இடத்திலே, உயர்ந்த மயிர்த் தலைகளையுடைய கற்குவியல்கள், கள்ளினையுடைய பாழிடமாகிய களர்நிலந்தோறும் நிறைந்திருக்கும். நினைப் போரையும் நடுங்கச் செய்து, செல்லத் துணிவதற்கும் அருமையுடையதான காட்டிடையிலேயுள்ள, அத்தகைய கொடிய சுரத்தினையும் அவர் கடந்து போயினர். ஆனாலும்,

போரிடுவோரது எதிர்ந்த போரினை, வெற்றியுடன் முடித்த, கெடாத நல்ல புகழினையும், வானிடத்தேயும் அளாவுமாறு உயர்த்த வெண்கொற்றக் குடையினையும் உடையவன் பசும்பூண் பாண்டியன். அவனது, பாடுதல் பெற்ற சிறப்பினையுடைய மதுரையைப் போன்ற நின்னுடைய, அலையும் வண்டினம் ஒலிக்கும் உச்சியினையுடைய, பூவிதழ்கள் பொருந்திய கூந்தலிடத்தே பொருந்தித் துயின்றவரான அவர், அந்த இன்பச் செவ்வியை நினைந்து தம் நெஞ்சம் உருகியவராக, விரைந்து வருவார்; (அதனால் நீயும் இனி வருந்தாதிருப்பாயாக)

என்று, தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லி ஆற்றுவிக்க முயன்றனள் என்க.

சொற்பொருள்: 1. செறுவோர் -பகைவர். செம்மல்-செருக்கு தலைமையுமாம். 4 வலித்த இழுத்த.3 உய்க்கும் உதவி செய்யும் உபகாரம். 4. நல் இசை - நல்ல புகழ். 6. மயிர்த்தலைப் பதுக்கை மயிரோடு கூடிய தலைகளையுடைய புதைகுழிக் கற்குவியல்கள். 8. பனிக்கும் - நடுங்கச் செய்யும். 10. பொருவர் - பொருதுவார்; பகைவர். 14. ஆடு வண்டு - திரியும் வண்டினம்.15. தோடு - மலர் இதழ்.

விளக்கம்: இல்வாழ்க்கையிலே புகழ் தரும் பண்பு இரண்டு செயல்களுக்கே உரியதாகும். இதனை, ‘அரிதாய அறன் எய்தி அருளியோர்க்கு அளித்தலும், பெரிதாய பகை வென்று பேணாரைத் தெறுதலும், (பாலைக்கலி 11-14). 'நல்லிசை வலித்த நாணுடை மனத்தர்' என்றது, அதுகாறும் பொருள் முயற்சிகளில் ஈடுபடாது இருந்ததனால்,