பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் ★ 239


கொண்டிருக்கும். அத்தகைய பெரிய மலைநாடன் அவன். அவனுடன் நாம் கொண்ட நட்பானது.

குன்றங்களை வேலியாகக்கொண்ட சிற்றுாரிடத்தேயுள்ள மன்றத்து வேங்கை, மணநாளை அறிவிப்பதுபோலப் பூத்த, மணியையொத்த அரும்பினின்றும் பொன்போன்ற புது மலர்கள் பரந்து, அகன்ற பாறைகளை அழகு செய்து கொண்டிருக்கும் முற்றத்திலே, குறவர்கள்தம் மனையிலேயுள்ள ஆடுதலில் வல்ல மகளிர்களோடும் கூடிக் குரவைக் கூத்து ஆடி மகிழ்கின்ற, ஆரவாரமிக்க விழவுக்களத்தினைப் போன்றதாக,

நாள்தோறும், விரவிய பலவாகிய பூப்பலியோடு கலந்து, காவல் பொருந்திய பரந்த மனையினைக் காத்தல் கருதி, அன்னையானவள், நம் வேறுபாடு முருகனால் ஏற்பட்டதென்று எண்ணி, வேலனை அழைத்துவரும் காலமாகவே நமக்கு வந்து விளைந்தது.

என்று, தோழி, தலைமகன் சிறைப்புறத்தனாகத் தலைமகட்குச் சொல்லுவாயளாய்ச் சொன்னாள் என்க.

சொற்பொருள்: 1. காண் இனி - இபொழுது காண்பாயாக 2. மழை - மேகம் 4. இருங்கல் - பெரிய மலை. விடரகம் - பிளப்பிடங்கள் 6. குன்ற வேலி - குன்றம் சூழ்ந்த 10. மனைமுதிர் மகளிர் - வீட்டிலுள்ள அறிவதறிந்த பெண்கள். 11. ஆர்'கலி - பேராரவாரம், விழவு குரவையடி முருகனைப் போற்றும் விழா. 15. பருவம் - காலம்.

விளக்கம்: காவல் கண்ணி - இற்செறித்தல் கருதி எனலும் ஆம். அன்றி, வீட்டின் தகுதி குறையாது காப்பவன் முருகனே ஆதலின், அவனைக் காக்குமாறு வேண்டி வழிபடுதல் என்றும் கொள்ளலாம். வேலன் - வெறியாடுவோன். நாடன் கேண்மை மணமாக விளையாது வேலன் தரூஉம் பரவமாக விளைந்ததே?” என்பதனால், வரைவுவேட்டலே இதன் பொருளாகும்.

233. நீடலோ இலர்!

பாடியவர்: மாமூலனார். திணை: பாலை. துறை: பிரிவின்கண் வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது. சிறப்பு: இறந்த முன்னோர்களுக்கு நல்ல நிலை கிடைத்தல் வேண்டுமெனக் கருதிய உதியஞ்சேரலாதன் பெருஞ்சோறு அளித்து அதனை நிறைவேற்றியது.

(தலைவனின் பிரிவினாலே உடல் நலிந்திருந்த தலைவிக்குத் 'தலைவன், அவள் உறவை மறந்து ஒருபோதும் இருப்பவனல்லன்'