பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் ★ 245



விளக்கம்: ‘என்னள் கொல் அளியள் என்னாதோர். உள்ளார் கொல்லோ? உள்ளியுஞ் சிறந்த செய்தியின் மறந்தனர் கொல்லோ?’ என்றது, மீண்டு வருவதாகக் கூறிச் சென்ற கார்காலத்தினது வரவை.'அயலறி பசலையொடு தொன்னலஞ் சிதையச் சாஅய்’ என்றதனால், ஊரவர் பழித்துரை மிகுதலையும் நினைந்து வருந்துகின்றனள். வாடை நலிய, என்றதனால், கார்காலத்து மீள்வதாகக் குறித்துச் சென்றவன் பின்பணிக் காலம் வந்தும் வரக்காணாது, தலைவி துயரால் மிகவும் மெலிந்து புலம்புகின்றனள்

பாடபேதங்கள்: 1. கள்வன். 16. அருளின்று நலிய.

236. பெரிதும் தப்பினேன்!

பாடியவர்: பரணர். திணை: மருதம் துறை: ஆற்றாமை வாயிலாகப் புக்க தலைமகன் நீக்கத்துக்கண், புக்க தோழிக்குத் தலைமகள் சொல்லியது. சிறப்பு: ஆதிமந்தி தன் காதலனைத் தேடிச் சென்றது பற்றிய குறிப்பு.

(ஊடியிருந்த தலைவியிடத்தே நாணி ஒடுங்கிச் சென்று, அவளுடைய ஆற்றாமையைத் துணையாகக்கொண்டு சேர்ந்திருந்த தலைவன், மீண்டும் அவளைப் பிரிந்துசெல்ல, அவள் தோழியிடம் இப்படிக் கூறி வருந்துகின்றாள்.)

        மணிமருள் மலர முள்ளி அமன்ற,
        துணிநீர்,இலஞ்சிக் கொண்ட பெருமீன்
        அரிநிறக் கொழுங்குறை வெளவினர் மாந்தி,
        வெண்ணெல் அரிநர் பெயர்நிலைப் பின்றை,
        இடனில நெரிதரு நடுங்கதிர்ப் பல்சூட்டுப் 5

        பனிபடு சாய்ப்புறம் பரிப்பக், கழனிக்
        கருங்கோட்டு மாஅத்து அலங்குசினைப் புதுப்பூ
        மயங்குமழைத் துவலையின் தாஅம் ஊரன்
        காமம் பெருமை அறியேன், நன்றும்
        உயர்த்தனென்-வாழி, தோழி!-அல்கல் 10

        அணிகிளர் சாந்தின் அம்பட்டு இமைப்பக்,
        கொடுங்குழை மகளிரின் ஒடுங்கிய இருக்கை
        அறியா மையின் அழிந்த நெஞ்சின்,
        ‘ஏற்றுஇயல் எழில்நடைப் பொழிந்த மொய்ம்பின்,
        தோட்டுஇருஞ் சுரியன் மணந்த பித்தை, 15

        ஆட்டன் அத்தியைக் காணிரோ?’
        என நாட்டின் நாட்டின், ஊரின் ஊரின்,