பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் ★ 247


நாள்தோறும். 14. ஏற்றியல் ஏறு போன்ற நிமிர்ந்த நடை 19. கெடுத்த - போக்கிய 21. ஏதம் துன்பம்.

விளக்கம்: ‘ஆதி மந்திபோலப் பேது பெரிதுறல் நன்றும் உய்ந்தனென்’ என்றதால், தலைவன் பரத்தையுடன் புதுப் புனலாடி நெடுநாள் பிரிந்திருந்தானாதல் வேண்டும்.

மேற்கோள் புலவி பொருளாக அச்சம் வருவதற்கு அணி கிளர் சாந்தின் ஒடுங்கிய இருக்கை என்னும் பகுதியை, அணங்கே விலங்கே என்னுஞ் சூத்திர உரையிலே காட்டுவர் பேராசிரியர்.

பாடபேதங்கள்: 3. வெவ்விளர். 5. இடைநிலம். 7. மாஅத்த அஞ்சினை. 10. உயர்ந்தனென்.

237. இனைதலை விடுவாயாக!

பாடியவர்: தாயங் கண்ணனார். திணை: பாலை, துறை: தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறீஇயது. சிறப்பு: உறையூரின் செழுமை.

(தலைவனது பிரிவுக்காலத்திலே, தன் உடல் நலமழிந்து வேறுபட்டுத் தோன்றினாள் தலைமகள். அவளை ஆற்றுவிக்கக் கருதிய தோழி, அவளிடத்தே, தலைவன் அவளை மறந்து பிரிந்து இருக்க மாட்டான் எனக் கூறுகின்றாள்; ஆனால் ஆற்றியிருக்கவும் வேண்டுகிறாள்.)

‘புன்காற் பாதிரி அரிநிறத் திரள்வி நுண்கொடி அதிரலொடு நுணங்கறல் வரிப்ப, அரவுஎயிற்று அன்ன அரும்புமுதிர் குரவின் தேன்இமிர் நறுஞ்சினைத் தென்றல் போழக், குயில்குரல் கற்ற வேனிலும் துயில்துறந்து 5

இன்னா கழியும் கங்குல்’ என்றுநின் நல்மா மேனி அணிநலம் புலம்ப, இணைதல் ஆன்றிசின்-ஆயிழை! கனைதிறல் செந்தீ அணங்கிய செழுநிணக் கொழுங்குறை மென்தினைப் புன்கம்.உதிர்த்த மண்டையொடு, 1O

இருங்கதிர் அலமரும் கழனிக் கரும்பின் விளைகழை பிழிந்த அம்தீஞ் சேற்றொடு, பால்பெய் செந்நெற் பாசவல் பகுக்கும் புனல்பொரு புதவின்: உறந்தை எய்தினும், வினைபொரு ளாகத் தவிரலர்-கடைசிவந்து 15