பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் ★ 251



239. ஒருத்தி பெரு நல்லூரே!

பாடியவர்: எயினந்தை மகன் இளங்கீரனார். திணை: பாலை, துறை: பொருள்வயிற் பிரிந்து போகா நின்ற தலைமகன், தன் நெஞ்சிற்குச் சொல்லியது. சிறப்பு: மகளிர் பிறைதொழுஉம் நிகழ்ச்சி பற்றிய செய்தி.

(வினை.வயிற் பிரியக்கருதி தலைமகனின் பிரிவுக்கு இணங்காது தலைவி ஊடியும் கலங்கியும் வருந்தினாள். எனினும், பொருள் ஆர்வம் மிகப்பெருக அவன் அவளைப் பிரிந்து சென்றனள். மறுநாள், வழியிடையிலே தலைவியின் நினைவு மேலெழ, அவன் இவ்வாறு தன்னுட் கூறி வருந்துகின்றான்.)

        அளிதோ தானே, எவன்ஆ வதுகொல்!
        மன்றும் தோன்றாது, மரனும் மாயும்
        ‘புலிஎன உலம்பும் செங்கண் ஆடவர்,
        ஞெலியொடு பிடித்த வார்கோல் அம்பினர்
        எல்ஊர் எறிந்து, பல்ஆத் தழீஇய 5

        விளிபடு பூசல் வெஞ்சுரத்து இர்ட்டும்
        வேறுபல் தேஅத்து ஆறுபல நீந்திப்
        புள்ளித் தொய்யில், பொறிபடு சுணங்கின்,
        ஒள்இழை மகளிர் உயர்பிறை தொழுஉம்
        புல்லென் மாலை, யாம்.இவண் ஒழிய, 10

        ஈட்டுஅருங் குரைய பொருள்வயிற் செலினே,
        நீட்டுவிர் அல்லிரோ, நெடுந்தகையீர்? எனக்,
        குறுநெடும் புலவி கூறி, நம்மொடு
        நெருநலும் தீம்பல மொழிந்த
        சிறுநல் ஒருத்தி பெருநல் ஊரே! 15

சிவந்த கண்களையுடைய மறவர்கள் புலியைப்போல் முழங்குபவர்களாகத், தீக்கொள்ளியுடனே பிடித்துள்ள நீண்ட கூர்மையான அம்பினையும் உடையவர்களாகச் சென்று, இரவிலே மாற்றாரின் ஊரினைக் கொள்ளையிட்டுப் பல ஆனினங்களையுங் கவர்ந்து வருவர். அவ் வேளையிலே எழுந்த ஒலித்தல் மிகுந்த ஆரவாரம் வெம்மையான சுரநெறிகளிலே எதிரொலிக்கும். அப்படிப்பட்ட மொழி வேறுபட்ட பல தேயங்களின் நெறிகள் பலவற்றையும் கடந்து சென்று

“புள்ளி புள்ளிகளாக எழுதப்பட்ட தொய்யிலையும், பொறிகள் பொருந்திய தேமலையும் உடைய, ஒளிமிகுந்த அணிகலன் அணிந்த பெண்கள், உயர்ந்த பிறையினைத்