பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/27

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12

அகநானூறு - மணிமிடை பவளம்ஓ வாடைக் காற்றே!

நம்மிருவருக்கும் மாறுபாடில்லாத காலத்தே;

பனி வருத்தாநின்ற பாதிராத்திரி இருளிலே, தனித் துள்ளாரது வலிமையினை ஆராயாயாய்த் தன்ணென்று நின்னை யாம் வெறுக்குமாறு வருத்தா நின்றாய்காண்!

பலரும் கையாற்றொழுந் தன்மையினையுடைய கடவுட் . டன்மை அமைந்த செய்வினையாகிய ஒதல் வினையின் பக்கலிலே சென்ற எம் தலைவர் விரைய வந்தனராயின்,

விரிந்த தலையாட்டத்தாற் பொலிந்த விரைந்தசெலவினையுடைய நன்மை வாய்ந்த குதிரைப்படை முதலாக, மாற்றார்க்கு அச்சம் வருகின்ற பிறபடைகளோடும், தான் வேண்டிய புலத்துத் தங்கிய, பெரிய வளத்தையுடைய கரிகால் வளவனுக்கு முன்பாக நிற்றலை மாட்டாராய், வாகையூர்ப் பறந்தலையிலே, அவன் வெற்றிபெறத் தாம் தோற்றுத் தமது ஒன்பது குடையையும் நடுப்பகலிலே போட்டு ஒழித்த, பெருமை யொழிந்த மன்னர் ஒன்பதின்மரைப்போல, நீயும் மிகுதியும் ஒடுவை!

என்று, தலைமகன் வினைமுற்றி மீண்டமை யுணர்ந்த தோழி, தலைமகட்குச் சொன்னாள் என்க.

சொற்பொருள்: 1. அரம் போழ் அவ்வளை - அரத்தாற் போழப்பட்ட அழகிய வளைகள்; போழ்தல் - பிளத்தல். 2. நிரம்பா வாழ்க்கை - முடிவு போகாத இல்வாழ்க்கை. 3.ஈர்ங்காழ் ஈரிய கொடை, ஈரிய-இரண்டாகப் பிளக்கப்பட்ட 3. ஈங்கை - ஒருவகைச் செடி. 4. ஆலி - ஆலங்கட்டி வால்வி - வெள்ளிய பூக்கள். 5. ஓதி - ஒந்தி மையணல் இருண்டதாடி 7.படாஅப் பைங்கண் உறங்காத பசிய கண். பாவடி - பரந்த அடி கயவாய் - பெரிய வாய், 8.கடாஅம் மதநீர், 9. கொண்மு - மேகம். 10. மைதோய் விசும்பு-நீல நீறந்தோய்த்த விசும்பு மாதிரம்-திசை, 1. பானாட் கங்குல் பாதிராத்திரி இருள். 12. மதுகை - வலிமை, தூக்கல் - ஆராய்தல். 12. முனிய - வெறுக்க. அலைத்தி வருத்துகின்றாய். முரண் மாறுபாடு. 14. கடவுட்சான்ற கடவுட்டன்மை உடைய. 16. பரியுண்ட நன்மான் - விரைந்த செலவையுடைய நன்மை வாய்ந்த குதிரைப்படை 18 முன் நிலை செல்லார் - முன் நிற்றலை மாட்டார்.19. சூடாவாகை - வாகையூர். ஆடுபெற - வெற்றிபெற, 20. நன்பகல் - நடுப்பகல் 21. பீடு - பெருமை.

மேற்கோள்: ‘பனியடுஉ நின்ற காலை’ என்பதனை, முன் பனியாமம் குறிஞ்சிக்கண் வந்ததற்குப் பணியெதிர் பருவமும்