பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் ★ 255


        மூங்கில் இளமுளை திரங்கக், காம்பின்
        கழைநரல் வியலகம் வெம்ப, மழைமறந்து
        அருவி ஆன்ற வெருவரு நனந்தலைப்
        பேஎய் வெண்தேர்ப் பெயல்செத்து ஓடி,
        தாஅம் பட்ட தனிமுதிர் பெருங்கலை 10

        புலம்பெயர்ந்த உறைதல் செல்லாது அலங்குதலை
        விருந்தின் வெங்காட்டு வருந்தி வைகும்
        அத்த நெல்லித் தீஞ்சுவைத் திரள்காய்
        வட்டக் கழங்கின் தாஅய்த் துய்த்தலைச்
        செம்முக மந்தி ஆடும் 15

        நல்மர மருங்கின் மலைஇறந் தோரே!

வாழ்க, தோழி!

“என்றும் என்னை வெறாது எனக்கு அருள்பவர்; எவ்வகையான வெறுப்பும் இல்லாமல் ஒன்றுபட்ட பிளவுபடாத நட்பினையுடைய இனியவர்; அவர்” என்றெல்லாம் அவரைப் பற்றிய நல்ல செயல்களைக் கூறினாலும், எந்நாளும் நம்மை விட்டுப் பிரியாத காதலோடு அருகேயே இருந்தவராகிய நம் முடையவரான காதலர்,

உயர்ந்த மலையுச்சிகளிலேயுள்ள மூங்கிலின் இளைய முனைகள் வாடவும், மூங்கிற் கழைகள் ஒலிசெய்யும் பாறையிடங்கள் வெம்பவும், மழை பெய்தலை மறந்து அருவிகளும் இல்லையாகிப் போன, அச்சம்வரும் அகன்ற இடத்தே தோன்றிய வெண்மையான பேய்த்தேரை மழையென்று எண்ணி ஒடித் தாகம்பட்ட தனித்த முதிர்ந்த பெரிய கலைமானானது, அவ்விடத்தினின்றும் பெயர்ந்து வேற்றிடஞ் சென்று வாழ்தலையும் செய்யாது, அப்பேய்த்தேர் அசையும் புதிய தன்மையினையுடைய காட்டிடத்தேயே வருந்தித் தங்கியிருக்கும் காட்டிலுள்ள, நெல்லி மரத்தின் இனிய சுவையுள்ள திரண்ட காயங்களாகிய வட்டமான கழங்குகளைக் கைக்கொண்டு, பஞ்சிபோன்ற தலை மயிரினையும் சிவந்த முகத்தினையுமுடைய மந்திகள் தாவித்தாவி விளையாடும் நல்ல மரங்கள் பொருந்திய பக்கத்தையுடைய மலைப்பகுதியைக் கடந்தும் சென்றவராயினர். (இனி, வருந்தாது என் செய்வேன்?)

என்று, பிரிவிடை வேறுபட்ட தலைமகள் வற்புறுத்துத் தோழிக்குச் சொன்னாள் என்க.

சொற்பொருள்: 1. துனி - வெறுப்பு. துவரா நட்பு - பிரியாத நட்பு. 2. முனியாது - வெறுத்து ஒதுக்காது. 3. அல்கலும்