பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

256

அகநானூறு - மணிமிடை பவளம்


எப்போதும்.4.உழையர்-அருகிருப்போர்.6.திரங்க-வாடிவதங்க 10. தாஅம் - தாவும். 11. அலங்குதலை - அசைதலையுடைய. 13. அத்தம் - காடு.

விளக்கம்: “நம்மீது மிகுதியும் அன்புடையவராகக் கூடியிருந்தவர்தாம் அவரென்றாலும், இப்படி நம்மை வாடி வருந்துமாறு செய்து பிரிந்தனரே, இனி, எவ்வாறு யான் வருந்தா திருப்பேன்?” என்கின்றாள்.

உள்ளுறை: பேய் வெண்தேர்ப் பெயல் செத்தோடித் தாஅம் பட்ட தனிமுதிர் பெருங்கலை, புலம் பெயர்ந்துறைதல் செல்லாது, அலங்குதலை விருந்தின் வெங்காட்டு வருந்தி வைகும்’ என்றாள், தலைவன் பொருளை நச்சி வேற்று நாட்டுக்குத் தன்னைப் பிரிந்துபோயின கொடுமையை எண்ணி

பாடபேதங்கள்: 1. அலங்கு நிலை 16, நீண் மரம்.

242. பண்பு தர வந்தது

பாடியவர்: பேரி சாத்தனார். திணை: குறிஞ்சி. துறை: தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழி தலைமகட்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது.

(களவிலே தன் காதலனுடன் கூடிவரும் தலைவி, இடையிலே அவன் உறவினைச் சில நாட்கள் பெறாதுபோக, அதனால் வாடி மெலிந்தனள். தாய் அதுகண்டு, முருகால் வந்த குற்றமென ஐயுற்று, முருகனை வேண்டுதற்குரிய ஏற்பாடுகளிலே ஈடுபட்டனள். அதனைத் தலைவன் அறிய உரைத்து, விரைவிலே மணம்சேர்க்க விரும்பிய தோழி, இப்படிக் கூறுகின்றாள்.)

        அரும்புமுதிர் வேங்கை அலங்கல் மென்சினைச்
        சுரும்புவாய் திறந்த பொன்புரை நுண்தாது
        மணிமருள் கலவத்து உறைப்ப, அணிமிக்கு
        அவிர்பொறி மஞ்ஞை ஆடும் சோலைப்,
        பைந்தாட் செந்தினைக் கொடுங்குரல் வியன்புனம், 5

        செந்தார்க் கிள்ளை நம்மொடு கடிந்தோன்
        பண்புதர வந்தமை அறியாள், நுண்கேழ்
        முறியுரை எழில்நலத்து என்மகள் துயர்மருங்கு
        அறிதல் வேண்டும் எனப், பல்பிரப்பு இரீஇ
        அரியா வேலற் றரீஇ, அன்னை 10

        வெறிஅயர் வியன்களம் பொலிய ஏத்தி
        மறிஉயிர் வழங்கா அள்வை, சென்றுயாம்