பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் ★ 259


பொருட்டாகவேனும், அவரை யாம் சென்று தழுவுவோம் என்கின்றனள். அவன் வராதவன் என்பதனை உணர்த்துவது போல, யாமே சென்று தழுவுவோம் என்று சொல்லுவதன் நயமும் உணர்க. தலைவன் , தன் காதலியின் வேதனையையும், குடும்ப கெளரவத்தையும் உளங்கொண்டு மணந்து கொள்வதற்கு விரைதல் வேண்டும் என்பது தோழியின் குறிப்பாகும்.

பாடபேதங்கள்: 18 நளி முகை 22. மலர்ந்த மார்பு.

243. தொல்வினைப் பயனே!

பாடியவர்: கொடியூர்க் கிழார் மகனார் நெய்தற்றத்தனார்; குடிக்கிழார் மகனார் நெய்தற்றதனார் எனவும் வழங்கும். திணை: பாலை துறை: தலைமகன் பிரிவின்கண் வற்புறுத்துந் தோழிக்குத் தலைமகள் 'ஆற்றேன்' என்பதுபடச் சொல்லியது.

(கார்காலம் முடிந்து அடுத்த வாடைக் காலமும் வந்துவிட்டபின்பும், காதலனின் வரவைக் காணாது கண்கலங்கிப் புலம்பியிருக்கும் தலைவி, தன்னைத் தேற்றிய தோழிக்கு, வாடையின் செயலைப் பழிப்பதுபோல, இப்படிக் கூறித் தன்னுடைய ஆற்றாமையைப் புலப்படுத்துகிறாள்.)

        அவரை ஆய்மலர் உதிரத்துவரின்
        வாங்குதுளைத் துகிரின் ஈங்கை பூப்ப
        இறங்குபோது அவிழ்ந்த ஈர்ம்புதல் பகன்றைக்
        கறங்குநுண் துவலையின் ஊரழை அணியப்,
        பெயர்நீர் புதுவரல் தவிரச், சினைநேர்பு 5

        பீள் விரிந்து இறைஞ்சிய பிறங்குகதிர்க் கழனி
        நெல்ஒலி பாசவல் துழைஇக், கல்லெனக்
        கடிதுவந்து இறுத்த கண்இல், வாடை!
        'நெடிதுவந் தனை என நில்லாது ஏங்கிப்
        பலபுலந்து உறையும் துணைஇல் வாழ்க்கை 1O

        நம்வலத்து அன்மை கூறி, அவர்நிலை
        அறியுநம் ஆயின், நன்றுமன் தில்ல;
        பனிவார் கண்ணேம் ஆகி, இனிஅது
        நமக்கே எவ்வம் ஆகின்று;
        அனைத்தால் தோழி! நம் தொல்வினைப் பயனே! 15

தோழி! அவரையின் அழகிய பூக்கள் உதிர்ந்தன. வளைந்த துளையினையுடைய சிவந்த பவளத்தைப்போல ஈங்கையும் பூத்துள்ளது. ஞாயிறு மேற்றிசையிலே இறங்கும் மாலைக் காலத்திலே, இதழ்விரிந்து மலந்த குளிர்ந்த புதரிலேயுள்ள பகன்றைப் பூக்களின் மணமானது, ஒலிக்கும் வாடையுடனே