பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் ★ 261



244. பாணன் வந்தனன்!

பாடியவர்: மதுரை. மள்ளனார். திணை: முல்லை. துறை: வினைமுற்றிய தன்லைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது.

(தலைமகன், வேந்தனின் வினைமுடித்தற் பொருட்டாக வேற்றுார் சென்று பாசறைக்கண் இருக்கின்றான். அவனுடைய பிரிவினுக்கு ஆற்றாது நலிந்த தலைவியானவள், அவன் வருவதாக உறுதிகூறிச் சென்ற காலத்தின் எல்லையும் கடந்ததாகத், தான்மிகவும் உள்ளம் நைந்தவளானாள். மேலும், தன் துயரினைத் தாங்க முடியாத அவள், பாணனைத் தூது அனுப்புகின்றாள். வினை முடிந்திருக்கும் தலைமகன் அந்தப் பாணனின் சொற்களைக் கேட்டு இப்படித் தேர்ப்பாகனிடம் சொல்லுகிறான்.)

        ‘பசைபடு பச்சை நெய்தோய்த் தன்ன
        சேயுயர் சினைய மாச்சிறைப் பறவை
        பகலுறை முதுமரம் புலம்பப் போகி,
        முகைவாய் திரந்த நகைவாய் முல்லை
        கடிமகள் கதுப்பின் நாறிக் கொடிமிசை 5

        வண்டினம் தவிர்க்கும் தண்பதக் காலை
        வரினும், வாரார் ஆயினும் ஆண்டு அவர்க்கு
        இனிதுகொல், வாழி தோழி?” எனத்தன்
        பல்லிதழ் மழைக்கண் நல்லகஞ் சிவப்ப,
        ‘அருந்துயர் உட்ையள் அவள் என விரும்பிப் 10

        பாணன் வந்தனன், துதே, நீயும்
        புல்லார் புரவி, வல்விரைந்து, பூட்டி,
        நெடுந்தேர் ஊர்மதி, வலவ!
        முடிந்தன்று அம்ம, நாம் முன்னிய வினையே!

பாகனே! “குளிர்ந்த செவ்வியை உடையது கார்காலம். அதன்கண். பசைபொருந்திய தோலினை நெய்யிலே தோய்த் தாற்போன்ற கருமையான சிறகுகளையுடைய வெளவாலானது, தான் பகலிலே தங்கியிருந்த மிகவும் உயர்ந்த கிளைகளையுடைய முதிர்ந்த மரம் தனித்திட, மாலையிலே புறத்தே பறந்து செல்லும், கொடியின்கண் இதழ் விரித்த அரும்புகளையுடைய முல்லையானது சிரித்துக் கொண்டிருப்பது போலத் தோன்றி, மணமகளுடைய கூந்தலைப்போல நறுமணம் பரப்பிக்கொண்டு, வண்டினத்தைத் தன்னை விட்டு அகலாதவாறு தடுத்துக் கொண்டிருக்கும்.

தோழி! நம் தலைவர் இவ்விடத்தே வந்தாலும் வராமலிருந்தாலும், அவ்விடத்தே அவர்க்கு எல்லாம் இனியதே