பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் ★ 267




        முனைபாழ் பட்ட ஆங்கண், ஆள்பார்த்துக்
        கொலைவல் யானை சுரம்கடி கொள்ளும்
        ஊறுபடு கவலைய ஆறுபல நீந்திப் 1O

        படுமுடை நசைஇய பறைநெடுங் கழுத்தின்,
        பாறுகிளை சேக்கும் சேண்சிமைக்
        கோடுயர் பிறங்கல் மலைஇறந் தோரே.

தோழி! வாழ்க! பொருளினை விரும்பியவராயினார் நம் தலைவர்.

அழல்போலத் தோன்றும் வாயினையும், பெரிய சுற்றத்தினையும் உடைய ஆண் கரடியானது, கரிய கிளைகளையுடைய இருப்பை மரத்தின் வெண்மையான பூக்களைத் தின்னும். அது வெறுத்துவிட்டதென்றால், பெரிய செம்மண் புற்றினது உயரமான உச்சியைப் புற்றாஞ் சோற்றிற்காகப் பெயர்த்துக் கொண்டிருக்கும். அப்படிப்பட்ட வழியினையும், ‘செல்வதற்கு அரியதாயிற்றே என அவர் நினையாதாராயினார்.

பகைவரின் தாக்குதலுக்கு உட்பட, அதனால் பாழாகிக் கிடக்கும் காட்டோரத்துச் சிற்றுாராகிய இடத்திலே, கொல்லுதலிலே வல்ல யானையானது, வழியோடு வரும் ஆட்களை எதிர்பார்த்துக் கொண்டே காட்டுவழியைக் கவனமாகக் காத்துக் கொண்டிருக்கும். அப்படிப்பட்ட இடையூறுகளை உடையனவும், கவர்த்த பல நெறிகளை உடையனவுமான பலவற்றையும் கடந்தும் அவர் செல்பவராயினார்.

நீண்ட கழுத்தினையுடைய பருந்தானது, மிக்க் புலால் நாற்றத்தினை விரும்பியதாகப் பறந்துவந்த மரக்கிளைகளிலே தங்கியிருக்கும். நீண்ட உச்சியினையும் உயர்ந்த பல சிகரங்களையும் கொண்ட பக்கமலைகளை உடைய அத்தகைய வழிகளையும் அவர் கடந்து சென்றுள்ளார்.

கழுவாத முத்துக்களாகிய கண்ணிர் ஒழுகியிருக்கும் அழகிய முலைகளையுடைய, நம் நல்ல மாட்சிமையுடைய மார்பகம், அவர் தழுவுதலின்றித் தனிமையுற்று வருந்துமாறு அங்ஙனம் பிரிந்துசென்றவரான அவர், சற்றும் நம்மிடத்தே அருள் இல்லாதவரே என்பதனை நீயும் அறிவாயாக;

என்று, தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகளது வேறுபாடு கண்டு வேறுபட்ட தோழிக்குத் தலைமகள் சொன்னாள் என்க.