பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

268

அகநானூறு - மணிமிடை பவளம்



சொற்பொருள்: 1. மண்ணா முத்தம் - கழுவாத முத்துக்கள்; கண்ணிர்த் துளிகள். வன முலை - அழகிய முலை. 2. புலம்ப தனிமையுற்று வருந்த.4. அழல்வாய்-நெருப்பின் தன்மை போலச் சிவந்து தோன்றும் வாய். 6. இடக்கும் - பெயர்க்கும். 8. பகைபட பகைவரால்அழிக்கப்பட9.கடிகொள்ளும் காவல் காத்திருக்கும். 10. ஊறு-துன்பம்,11.படுமுடை-மிக்கமுடைநாற்றம் வீசும் தசை 12. பாறு - பருந்து. 13. பிறங்கல் - பக்க மலைகள்.

உள்ளுறை: ஆண் கரடி இருப்பைப் பூக்களைத் தின்று, அதனை வெறுத்துச்சென்று புற்றுக்களைப் பெயர்த்துக் கொண்டிருப்பது போல, அவரும் நம் இன்பத்தைத் துய்த்து வெறுத்துப், பொருளின்மீது பற்றுக் கொண்டவராயினர் என்க. அந்தப் பற்று நம் காதற்பாசத்தினும் மிகுதியாக, அவர் நம்மையும் மறந்தனர் எனச் சொன்னதாகவும் கொள்க.

248. பன்றியின் தறுகண்மை!

பாடியவர்: கபிலர். திணை: குறிஞ்சி. துறை: இரவுக் குறிச் சிறைப்புறமாகத் தலைமகட்குச் சொல்லுவாளாய்த் தலைமகள் கேட்கத் தோழி சொல்லியது.

(இரவுக்குறியிலே தலைமகனின் வரவை எதிர்பார்த்துத் தலைவியும் தோழியும் காத்திருக்கின்றனர். அவனும் வந்து, தோழியை அகன்று போகச் செய்யும் குறிப்பாக, அவண் ஒரு சார் மறைந்திருந்து, தன் வரவை உணர்த்துகின்றான். அப்போது தோழி, தலைவிக்குச் சொல்லுவதுபோல, அவன் கேட்குமாறு இப்படிக் கூறுகின்றாள்.)

        நகைநீ கேளாய்-தோழி!-அல்கல்
        வயநாய் எறிந்து, வன்பறழ் தழிஇ,
        இளையர் எய்துதல் மடக்கிக், கிளையொடு
        நான்முலைப் பினவல் சொலியக், கான் ஒழிந்து.
        அரும்புழை முடுக்கர் ஆள்குறித்து நின்ற 5

        தறுகட் பன்றி நோக்கிக், கானவன்
        குறுகினன் தொடுத்த கூர்வாய்ப் பகழி
        மடைசெலல் முன்பின்தன் படைசெலச் செல்லாது,
        அருவழி விலக்கும்எம் பெருவிறல் போலும் என,
        எய்யாது பெயரும் குன்ற நாடன் 10

        செறுஅளில் துடக்கலின், பரீஇப் புரிஅவிழ்ந்து,
        ஏந்துகுவவு மொய்ம்பிற் பூச்சோர் மாலை,
        ஏற்றுஇமில் கயிற்றின், எழில்வந்து துயல்வா,