பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் ★ 271


        இன்குரல் அகவுநர் இரப்பின் நாடொறும்
        பொன்கோட்டுச் செறித்துப், பொலந்தார் பூட்டிச் 5

        சாந்தம் புதைத்த ஏந்துதுவங்கு எழிலிமில்
        ஏறுமுந் துறத்துச், சால்பதம் குவைஇ,
        நெடுந்தேர் களிற்றொடு சுரக்கும் கொடும்பூண்
        பல்வேல் முசுண்டை வேம்பி அன்னஎன்
        நல்லெழில் இளநலம் தொலையினம், நல்கார் 1O

        பல்பூங் கானத்து அல்குநிழல் அசைஇத்,
        தோகைத் தூவித் தொடைத்தார் மழவர்
        நாகுஆ வீழ்த்துத், திற்றி தின்ற
        புலவுக்களம் துழைஇய துகள்வாய்க் கோடை
        நீள்வரைச் சிலம்பின் இரைவேட்டு எழுந்த 15

        வாள்வரி வயப்புலி தீண்டிய விளிசெத்து,
        வேறுவேறு கவலைய் ஆறுபரிந்து, அலறி,
        உழைமான் இனநிரை ஓடும்
        கழைமாய் பிறங்கல் மலைஇறந் தோரே

தோழி! நீ வாழ்வாயாக! நான் சொல்லும் இதனையும் கேட்பாயாக:

மயிலின் தோகையிலுள்ள இறகுகளை மாலையாகத் தொடுத்து அணிபவர் மழவர்கள். பல்வகையான பூக்களை உடையதான காட்டின் சுருங்கிய நிழல்களிலே, அவர்கள் தங்கிக், கன்றினையுடைய பசுவைக் கொன்று, அதன் ஊனைச் சுட்டுத்தின்பார்கள். புலால் வீசும் அந்த இடத்தைத் துழாவியவாறு, ஊன்துணுக்குகள் கலந்த புழுதியைத் தன்பால் கொண்டதாக, மேல்காற்றும் எழுந்து வீசும்.

ஆண்மானுடன் கூடியவாயிருக்கும் மான் கூட்டங்கள் அந்தக் காற்றின் ஒலியைக் கேட்டன. நீண்ட மூங்கில்களைக் கொண்ட மலையிலே, இரையினை விரும்பியதாக எழுந்த, ஒளி பொருந்திய கோடுகளைக் கொண்ட வலிய புலியானது ஏதோவொரு மானைக் கொன்றதால் எழுந்த ஒலியாக அதனைக் கருதின. அதனால் அஞ்சி அலறியவையாக, வேறு வேறு கவர்த்த வழிகளிலே எல்லாம் அவை அலறி ஒடிக் கொண்டிருந்தன. மூங்கில்கள் மூடியிருக்கும் அத்தகைய உயர்ந்த மலையிடத்தைக் கடந்துசென்றவர் நம் தலைவர்.

வளமான நரம்புகளை இறுக்கமாகப் பிணித்துக் கட்டிய, இசைக்கும் கோலினையுடைய, தெளிவான ஒலிமுழங்கும் கிணைப்பறையினோடு, தம் இனிய குரலினாலும் இனிதாகப்