பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/296

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் ★ 281


என்று, தலைமகன்.பிரிவின்கண் வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொன்னாள் என்க.

சொற்பொருள்: 2. பெரும் பிறிதாகின்று - பெரிதும் வேறுபாடு உடையதாயிற்று.3.அமரா முகம் விருப்பமற்ற முகம்; வெறுப்புக் காட்டும் முகம் 4 வாடாப் பூ பொற் பூ 8. உய்யல் வாழ்ந்திருத்தல் 10. ஆர் இருள் - மிக்க இருள். ஒய்ய ஒட்டி வர. 12. கணஞ்சால் கோவலர் - பெருங் கூட்டமாகிய கோவலர். நெடுவிளி நெடிதான கூப்பீடு. 15. தூம்பு - உட்டுளை நீர் வடிதற்கு இட்டுள்ள புழைகளைத் தூம்பு என்று இன்றும் தென்னாட்டார் வழங்குகின்றனர். 16 வல்சி உணவு. 18. நேரா ஒப்பில்லாத 20 அயிரியாறு - ஒர் ஆறு. 23. ஒலிவரு தழைத்து வருகின்ற. 26. மலைந்த பொருதிய.

விளக்கம்: கூந்தலை இருண்ட வானமாகவும், அதனிடையே விளங்கும் முகத்தை, அவ்வானிலே பொட்டிட்டதிங்கள் எனவும் உவமித்த நயம் காண்க -

பாடபேதங்கள்: 6. நெடுமதிற் கூடல். 10 ஏரா உய்ய.

254. ஊரருகே வந்தாய்!

பாடியவர்: மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்; கபிலர் பாடியதெனவும் பாடம். திணை: முல்லை. துறை: வினைமுற்றி வந்து எய்திய தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது. -

(வேந்தனின் காரியமாகத் தலைவியைப் பிரிந்து சென்றிருந் தனன் தலைவன். அந்த வினை முடிவுற்றதும்,"தேரினைவிரைவிற் செலுத்துக” எனத் தன் பாகனை ஏவினன். அவ்வாறே அவனும் செலுத்திவரத் தேர் ஊரின் அருகே அணுகியதும், தலைவன், தன் பாகனை இவ்வாறு வாழ்த்துகின்றான்.)

        ‘நரைவிரா வுற்ற நறுமென் கூந்தற்
        செம்முது செவிலியர் பலபா ராட்டப்
        பொலன்செய் கிண்கிணி நலம்பெறு சேவடி
        மணன்மலி முற்றத்து, நிலம்வடுக் கொளாஅ.
        மனைஉறை புறவின் செங்காற் சேவல் 5

        துணையொடு குறும்பறை பயிற்றி மேல்செல,
        விளையாடு ஆயத்து இளையோர்க் காண்தொறும்
        நம்வயின் நினையும் நல்நுதல் அரிவை
        புலம்பொடு வதியும் கலங்குஅஞர் அகல,
        வேந்துஉறு தொழிலொடு வேறுபுலத்து அல்கி, 10