பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் ★ 283



சற்றும் காலம் தாழ்க்காது, யாம் மகிழ்ச்சி அடையுமாறு, மாலையாகிய மணிகள் அணிந்த குதிரைகளின் உள்ளத்தை அறிந்தவனாக, விரைவாகத் தேரினைச் செலுத்தி, ஊருக்கு அருகாமையிலும் வந்துவிட்டனை (பாகனே! நீ வாழ்க!)

என்று, வினைமுற்றி, வந்து எய்திய தலைமகன் , தேர்ப்பாகற்குச் சொன்னான் என்க.

சொற்பொருள்: 1. நரை - நரை மயிர். 2. செம் - செவ்விய, பாராட்ட பேணிக் காக்க 3 கிண்கிணி - ஒலிக்கும் சதங்கை சேவடி - சிவந்த பாதங்கள். குறும்பறை பயிற்றி - குறுகப் பறக்குமாறு செய்து விளையாடி 9, புலம்பு - தனிமையால் வரும் வருத்தம் 10. வேறு புலம் - வேற்று நாடு. 1. பணை - பந்தி. முனை இய வெறுத்த. வினை - ஒடலாகிய வினை.15. தளவம் - செம்முல்லை. 16. வீததை புறவு - பூக்கள் மலிந்த காடு, 19 மா குதிரை. அறிவுறா அ உள்ளப் பாங்கினை அறிந்த தன்மையுடன்.

விளக்கம்: புறாக்களை இணைஇணையாகப் பறக்கவிட்டு ஆடும் மகளிர்களின் விளையாட்டினைக் கண்டு மகிழ்வதற்கு மாறாகத், தானும் என்னுடன் அங்ஙனம்கூடிக் களித்திருக்க முடியாமற் போய்த் தனித்திருப்பதனை நினைந்து வருந்துவாள் என்றனன், ‘காண்டொறும் நம் வயின் நினையும் என்றனன். அதனால், இவனும் அவளுடைய நினைவு மிகுதியுடையவனாக இருந்த தன்மையும் அறியப்படும். ‘முல்லை மணம் நிறைந்த காடென்றது கார்ப்பருவ வரவினைக் குறித்தது.

பாடபேதங்கள்: 2. பலர் பாராட்ட 15. முல்லையொடு தோன்றி தோன்ற 18 அளவையின் நீடாது.

255. தூது சொல்லும் அன்பர்!

பாடியவர்: மதுரை மருதனிள நாகனார். திணை: பாலை. துறை: பிரிவிடை வேறுபட்ட தலைமகள், ஆற்றாமை மீதுரத் தோழிக்குச் சொல்லியது. சிறப்பு: கடலிடைப் பிரிவுப் பற்றிய செய்திகள்.

(தலைவன் பிரிந்திருந்த காலத்து, அதனால் உடல்நலம் வேறுபட்ட தலைமகள், தன்னுடைய ஆற்றாமை மிகுதியாகத் தன்னுடையதோழிக்கு, அதன் தன்மையை இப்படிச் சொல்லுகின்றாள்.)

        உலகுகிளர்ந் தன்ன உருகெழு வங்கம்
        புல்வுத்திரைப் பெருங்கடல் நீர்இடைப் போழ,
        இரவும் எல்லையும் அசைவின்று ஆகி,