பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் ★ 15



கடலின் கரையை மெலிவிக்கும் காவிரி என்னும் பெரியயாற்றினுடைய கருமணல் ஒழுகிய நெடிய மடுவின் நிலைத்தற்கரிய ஆழ்ந்த நிலை தளருமாறு;

மயக்கத்தைச் செய்கின்ற இருண்ட நள்ளிரவிலே சென்று, தன் தமையன்மார் நாட்காலையிலே பிடித்துக் கொணர்ந்த, திரண்ட, உடலிடத்தே வரியுள்ள வாளை மீனுக்கு விலையாக, அழகிய உட்குழிந்த கொப்பூழினையும் அஞ்சொல்லினையு முடைய பாண்மகள், நெடிய கொடிகள் அசையும் கள்ளுமலிந்த வீதியினிடத்தே, பழைய செந்நெல் முகவைன்ய விரும்பாளாய்க், கழங்கினை ஒக்கும் பருத்த முத்தமோடு நல்ல ஆபரணங்களைக் கொள்ளும் பயன் மிக்க ஊர்களையும், பல வேற்படைகளையு முடைய எவ்வி என்பான்; நீதியை ஆராய்ந்த நல்ல மொழியாலே அடக்கவும் அடங்கானாய்ப், பொன்போலும் பூங்கொத்தினையும், நறிய மலரையுமுடைய புன்னை மரத்தினை விரும்பித் திதியனோடு பொருத அன்னிபோல;

நீயும் இறந்து படுவையோ!

(என்று உணர்ப்புவயின் வாரா ஊடற்கண் தலைமகன் தன்னெஞ்சிற்குச் சொன்னான் என்க.)

சொற்பொருள்: 1. வாய் - மெய். செத்தல் - கருதுதல், உள்ளி - நினைந்து. 2. பைதலை - துன்பம் உடையையாய், 3. நீத்தம் - வெள்ளம். 4. தலைநாள் - முதல் நாள். தயங்க - அசைய. 6. அறல் - கருமணல், கயல் மடு. அருநிலை நிலைத்தற்கரிய ஆழ்ந்த நிலை. 7.மாலிருள் நடுநாள்-மயக்கத்தைத் தருகின்ற இருண்டநள்ளிரவு. தன்னையர் - தன் தமையன்மார். 8. கணை கோட்டு வாளை திரண்ட உடலிடத்து வரியுள்ள வாளைமீன். 10. நுடங்கும் அசையும். நறவு - கள். மறுகு - வீதி. 11. முகவை - ஓர் அளவு. 13. வைப்பு - ஊர். 14. நயம்புரி - நீதியை ஆராய்ந்த 17, விளிகுறைஇறந்துபடுவை. 19. அமர்த்த மாறுபட்ட புயல் - மேகம். 20.இருளிய இருண்ட பிறங்கு குரல்-விளங்குகின்ற கொத்தான 22. பின்னிலை - பின்னே சார்ந்து நிற்றலை.

விளக்கம்: குறுமகள் பின்னிலை விடா நெஞ்சே! பைதலையாய் வருந்துதலன்றியும், அன்னிபோல விளிகுவை கொல்லோ எனக் கூட்டுக.

உள்ளுறை: நீத்தம் மலரை அலைத்ததோடு, கடற்கரையையும் குத்தி யிடித்தாற்போல, இவ்வாற்றாமை தலைவியது குழையும் உள்ளத்தை நெகிழ்வித்தன்றித், தோழியது வலிய உரனையும் சிதைப்பதாயிரா நின்றது; இனி, இவள் ஊடல் ஒழிவள்.காண் என்று ஆற்றினானாகக் கொள்க.